வெடிப்புள்ள தொட்டிகள் Broken Cisterns ஜனவரி 23, 1965 ரமாதா சத்திரம் அரங்கம் பீனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா 1. ஆண்டவரே, நான் நம்புகிறேன்; ஆண்டவரே, நான் நம்புகிறேன். எல்லாம் கைகூடிடும்;  ஆண்டவரே , நான் நம்புகிறேன். 2. சற்று நேரம் நாம் நின்ற வண்ணமாக தலைவணங்கு வோம். கர்த்தராகிய இயேசுவே, எங்களுடைய எளிய வழி யில் இந்தப் பாடலைப்பாடி நாங்கள் நம்புகிறோம் என்பதை உமக்குத் தெரிவிக்கிறோம். ஆண்டவரே, ஜீவ அப்பத்தை நீர் எங்களுக்கு தொடர்ந்து பிட்டுக் கொடுத்து, எங்களுக்குத் தேவையானதை உமது வார்த்தையிலிருந்து எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3. உட்காருங்கள். 'ஆமென்' என்னும் எல்லாவற்றிற்கும் போதுமான வார்த்தையை இப்பொழுது உரைத்த பிறகும், தேவனுடைய கம்பீரமான ஆசிர்வாதங்கள் சபையோரின் மேல் தங்கியிருக்குமென்று உறுதியாய் நம்புகிறேன். 4. இன்று காலை நான் அமர்ந்து, ஆராதனையில் நடந்த வைகளைக் கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தேன். வெவ்வேறு விதங்களில் சாட்சிகள் கூறப்பட்டதை நான் கேட்டு அனுபவித்தேன். இங்கு புதிதாக வந்துள்ளவர்களின் சாட்சியைக் கேட்பதற்கு - முக்கியமாக அந்த பாப்டிஸ்டு சகோதரன், அதை சற்று தவறாக எண்ணியிருந்ததற்காக மன்னிப்பு கேட்டதை- நான் பாராட்டுகிறேன். எவராகிலும் மனிதத் தன்மை கொண்டவர்களாய், சீரிய பண்புள்ளவர்களாய், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது பாராட்டத் தக்கது. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை, தேவனிடம் மன்னிப்பு கேட்டார். அதை நான் மெச்சுகிறேன். கர்த்தர் நமது சகோதரனையும் அவருடைய சுவிசேஷக சகோதரனையும் ஆசிர்வதிப்பாராக. 5. அந்த பாப்டிஸ்டு - நானும் ஒரு காலத்தில் பாப்டிஸ்டு சபையின் உறுப்பினனாயிருந்தேன். நான் மிஷனரி பாப்டிஸ்டு சபையின் உறுப்பினன். நான் ஜனங்களின் மத்தியில் வரும்போது, உங்களுக்கு என்ன உணர்வு தோன்றுகிறது என்பதை அறிவேன். எனக்கும் அத்தகைய உணர்வு முன்பு ஏற்பட்டுள்ளது - நான் அறிந்திராத ஏதோ ஒன்று என்னை நிறைத்தது போன்ற உணர்வு. 6. பெந்தெகொஸ்தே கூட்டம் ஒன்றை முதன் முறையாக நான் கண்டபோது எனக்கு நேர்ந்த அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. மிஷிகனிலுள்ள டோவாஜியாக் என்னுமிடத்தில் அது ஏற்பட்டது... என்னை மன்னிக்கவும். நான் டோவாஜியாக்குக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தேன். அங்கிருந்து இந்தியானாவுக்கு வந்து கொண்டிருந்தேன். அங்கு “'இயேசு' என்னும் பெயர் கார்களிலும் மற்றவிடங்களிலும் காணப்பட்டது. அன்று அவர் களுடைய ஆராதனைக்கு நான் சென்றிருந்தேன். அடுத்த நாள், நான் மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசும்படி என்னை அழைத்தனர். நானும் அவ்வாறு செய்தேன்... நான் எந்த சபையைச் சேர்ந்தவன் என்று அவர்கள் கேட்டனர். நான் பாப்டிஸ்டு என்று விடையளித்தேன். 7. அன்றிரவு கறுப்பு நிறமுள்ள வயோதிபர் ஒருவர் பிரசங்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும். அவர் மேடைக்கு வந்தார். அவரைக் கை பிடித்து கூட்டிக் கொண்டு வந்தனர். அவர் பிரசங்கிமார்களின் நீளமான 'கோட்டையும் வெல்வெட் கழுத் துப் பட்டையும் அணிந்திருந்தார். அவருடைய வழுக்கை தலையின் பின்புறம் சுற்றிலும் வெள்ளை மயிர் இருந்தது. இங்குள்ள அனைவரும் வேதபண்டிதர்களாயிருக்கும் போது, இப்படிப்பட்ட ஒருவர் ஆராதனை நடத்த அவர்கள் எப்படி அனுமதித்தனர்? அவர் எங்காவது மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டியவராயிற்றே!'' என்று வியந்தேன். ' 8. அன்று காலை மற்றவர்கள் இயேசு இவ்வுலகில் என்ன செய்தார் என்பது பற்றி பிரசங்கம் செய்தனர். ஆனால் இந்த வயோதிபர் பேச வந்தபோது, தம் பிரசங்கத்திற்கு பொருளாக யோபு 7:20ஐ எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவர் தெரிந்து கொண்ட வேதவாக்கியம் இது தான்: “நான் பூமியை அஸ்திபாரப் படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? அப்பொழுது விடியற் காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே'' (யோபு. 38:4,7-தமிழாக்கி யோன்). மற்றவர் பூமியில் என்ன நடந்ததென்று பேசினர்; இவரோ பரலோகத்தில் என்ன நடந்ததென்று பிரசங் கித்தார். 9. அவர் பேசத் தொடங்கின ஐந்து நிமிடங்களுக்கெல் லாம் கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் இறங்கினார். அவர் மேலே குதித்து, குதிங்கால்களைத் தட்டி ஓசையெழுப் பினார். மேடையின் மேல் போதிய இடம் இருந்தது. இங்குள்ள மேடையில் அது பாதி அளவு இருக்கும். இருந்த போதி லும், "இங்கு நான் பிரசங்கம் செய்வதற்கு உங்களிடம் போதிய இடமில்லை'' என்று சொல்லி விட்டு அவர் வெளியேறி னார். 10. எனக்கு அப்பொழுது இருபது வயதிருக்கும். நான் “அந்த வயோதிபருக்கு அது அவ்விதம் செய்யக் கூடுமானால் எனக்கு அது என்ன செய்யக் கூடும்?'' என்று எண்ணினேன், பார்த்தீர்களா? 11. புதிதாக வந்துள்ள சகோதரர்களுக்கு எல்லாவற்றை யும் தெளிவுபடுத்த- அவர்களை எங்கள் ஐக்கியத்திற்குள் வரவேற்கிறோம். இங்கு கத்தோலிக்க குருவானவர் ஒருவர். அமர்ந்திருப்பதாக அவர்கள் கூறினர். நான் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவன். ஆகவே என் குடும்பத்தினர் கத்தோ லிக்கர். இங்கு வேறு இருவர் இருக்கின்றனர்-பாப்டிஸ்டும் வேறு சபையைச் சார்ந்தவர்களும். சற்று முன்பு நீங்கள். குழப்ப முற்றிருக்கக் கூடும். அதைக் குறித்து யாருமே உங்களிடம் எடுத்துக்கூறவில்லை. எனவே அதற்கு நான் விளக்கம் தெரிவிக்க லாமென எண்ணுகிறேன். சகோ. ஷகரியன். இங்குள்ள அந்த அருமையான பிரசங்கியார், கர்த்தருடைய வருகை சமீபமா யுள்ளது என்பதை அறிந்தவராய் சந்தோஷத்தினால் நிறைந்த போது, அவர் நம்மிடம் அந்நிய பாஷை பேசினார். அதன் அர்த் தத்தை சொல்பவர் நம்மிடையே யுள்ளனர். "அர்த்தஞ் சொல்கிறவனில்லாவிட்டால், அவர்கள் பேசாமலிருக்கக் கடவர்கள்' என்று வேதம் உரைக்கிறது (1 கொரி. 14:28). ஆனால் அவர்கள் அந்நிய பாஷை பேசி அதற்கு அர்த்தம் கூறினால், அது தீர்க்க தரிசனமாகி விடுகிறது. எனவே இருவர் ஒரே நேரத்தில் பேசின அந்த குழப்பம்-அது சிறிதளவும் குழப்பமாயிருக்கவில்லை. ஏனெனில், ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்தார், மற்றவர் அர்த்தம் உரைத்தார். பாருங்கள்? எனவே அது... 12. நமது சகோதரருக்கு அது புரியாவிட்டால், அதை புரியவைக்கலாமென்று எண்ணினேன். அவர்களில் ஒருவர் சரியாக அர்த்தம் உரைத்தார். இரண்டு பேரும் எடுத்துக் கொண்ட காலவரையை கவனித்தீர்களா? மற்றவரும் ஆவி யால் நிறையப்பட்டிருந்தார். தேவனுடைய ஆவி ஒருவர் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்தது. மற்றவர் அதற்கு அர்த்தம் உரைத்தார். உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டுமென்று கருதி...சில நேரங்களில் மாமிச சிந்தை... இன்று காலை அந்த அருமை சகோதரன் மன்னிப்பு கேட்ட விதமாக. இதை புரிந்து கொள்ளாத நபருக்கு இது குழப்பமாகத் தென்படுகிறது. ஆனால் எங்களுடைய யுத்தத்தில் நீண்ட காலமாக போர்வீரராக இருக்கும் எங்களுக்கு இது என்னவென்று தெரியும். எனவே இதைக்குறித்து ஏதாவது விளக்கம் தெரிவிக்கலாமென்று முனைந்தேன். 13. இதை கூறுவதற்கு இது இடமில்லையென்று நானறி வேன். ஆயினும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஏதாவதொரு காரியத்தைச் சொன்னதால், நானும்... அந்த வயோதிப கறுப்பு மனிதன், “நான் பிரசங்கம் செய்ய இங்கு போதிய இடத்தை நீங்கள் வைக்கவில்லை'' என்று சொன்னாரல்லவா? நான் பிரசங்கம் செய்ய எனக்கு நீங்கள் போதிய நேரம் வைக்க வில்லை (சபையோர் கை கொட்டுகின்றனர்-ஆசி)-- நீண்ட நேரம் பிரசங்கம்.. 14. ஒரு நாள் ஒருவர் இவ்விதம் கூறினார். ஒருவர் இருபது ஆண்டு காலமாக ஒரு சபையில் போதகராக இருந்து வந்தாராம். ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் சபையில் அவர் சரியாக முப்பது நிமிடம் பேசுவது வழக்கம். ஆனால் ஒரு ஞாயிறு காலை மாத்திரம் அவர் வழக்கத்திற்கு மாறாக மூன்று மணி நேரம் பிரசங்கம் செய்தாராம். 15. எனவே மூப்பர் குழு (Deacon Board) அவரை யழைத்து, “போதகரே, உம்மை நாங்கள் பாராட்டுகிறோம். நீர் எப்பொழுதுமே வேதாகமத்துக்காகவும் அதன் உரிமைக் காகவும் நிற்பவர் என்றறிவோம். நாங்கள் தேவனுக்கு முன்பாக சுத்தராக இருக்கவேண்டுமென்பதற்காக நீர் எப்பொழுதும் எங்களைத் திருத்தி வருகிறீர். அதற்காக உம்மை நாங்கள் பாராட்டுகிறோம். நீர் தேவனுடைய ஊழியக்காரரென்று நம்புகிறோம். இன்று காலை நீரளித்த செய்தியை நாங்கள் மெச்சுகிறோம். ஆனால் ஒன்று மாத்திரம் உம்மை கேட்க விரும்பு கிறோம். மூப்பர் குழுவாகிய நாங்கள் பிரசங்கத்திற்காக காலவரையை குறித்திருந்தோம். ஒவ்வொரு ஞாயிறு காலையி லும் சரியாக முப்பது நிமிடம் மாத்திரமே நீர் பிரசங்கம் செய்து வந்தீரே, இன்று மாத்திரம் ஏன் மூன்று மணிநேரம் எடுத்துக் கொண்டீர்? ஆனால் ஒன்று மாத்திரம் ஞாபகம் வையுங்கள். நீர் செய்யும் ஒவ்வொன்றையும் நாங்கள் பாராட்டு கிறோம்'' என்றனர்-அவரை சற்று சமாதானப்படுத்த. 16. அவர், ''நல்லது சகோதரரே, அது ஏனென்று சொல்லு கிறேன் கேளுங்கள். நான் பிரசங்க பீடத்தின் மேல் ஏறும் போதெல்லாம் ஒரு மிட்டாயை வாயில் போட்டு சுவைப்பது வழக்கம். அது கரைந்து போக சரியாக முப்பது நிமிடம் எடுக்கும். அப்பொழுது நான் பிரசங்கத்தை நிறுத்தி விடுவேன். ஆனால் இன்று காலையில், நீண்ட நேரமாகிவிட்டதே என்று நினைத்து வாயிலிருந்ததை துப்பினேன். நான் வாயில் போட்டி ருந்தது பொத்தான்'' என்றாராம். (சபையோர் சிரிக்கின்றனர் 17. நான் வாயில் எதையும் போட்டுக்கொள்ளப் போவதில்லை. எனவே எனது ஜேபியில் நான் பொத்தானைத் துப்பமாட்டேன் என்று நம்புகிறேன், ஆனால் நாமோ...அது தேவதூஷணமாகத் தென்படவில்லையென நினைக்கிறேன். நான்... தேவனுக்கும் கூட நகைச்சுவை மனப்பான்மை உண் டென்று உங்களுக்குத் தெரியுமா? 18. இங்கு வந்து ஜக்கியங்கொள்ளும் இந்நேரத்துக்காக வும், மறுபடியும் என் எளிய விதத்தில் ஜீவ அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கக் கிடைத்த பெரும் பேறுக்காகவும் நான் நன்றி யுள்ளவனாயிருக்கிறேன்.நேற்றிரவு இங்கிலாந்திலிருந்து வந்துள்ள அந்த வேதபண்டிதர் பேசினாரே, அதற்கு பிறகு ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள நான் மேடையின் மேலேறி பேச எனக்கு விருப்பமில்லை. ஆயினும் என் இருதயத்திலுள்ள தன் அர்த்தத்தை தேவன் வியாக்கியானப்படுத்தி தருவாரென்று நம்புகிறேன். பாருங்கள்? நான் சரியான வார்த்தைகளை உபயோகிக்காமற்போனாலும், என் எண்ணங்கள் சரியாக உள்ளன என்று நம்புகிறேன். 19. இப்பொழுது நான் வேதவாக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். நான் படிக்கும் வேதபாகத்தை உங்களில் அநேகர் உங்கள் வேதாகமத்தில் தொடர்ச்சியாக கவனித்து வர விரும்புவீர்கள். இன்று காலை, சில நிமிடங்களுக்கு, தீர்க்கதரிசி யாகிய எரேமியாவின் புத்தகம், 2ம் ஆதிகாரம், முதலாம் வசனத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக்குக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றி வந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த தேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளி களானார்கள்; பொல்லாப்பு அவர்கள் மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார். யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணிவனரும், அவாந்தர வெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒரு வனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுள்ள வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,. . .' என்னை விட்டு தூரப்பட்டு, மாயையைப்பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள். செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக் கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் கித்தீமின் தீவுகள் மட்டும் கடந்து போய்ப் பார்த்து கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும், எந்த ஜாதியாவது தேவர்களல்லாதவர்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள். வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக்கொந்தளித்து, மிகவும். திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். எரே. 2:1-13 20. கர்த்தர் தாமே வாசித்த இந்த வசனங்களுடன் தமது ஆசிர்வாதங்களைக் கூட்டுவாரக.அதிலிருந்து “வெடிப்புள்ள. தொட்டிகள்' என்னும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 21. இன்று காலை இந்த வேதவசனங்களை வாசித்தோம் வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவனுடைய ஆவியால் அருளப் பட்டவையே. நாம் சீர்திருந்துவதற்கும் புரிந்து கொள்வதற்குமே தேவனுடைய வீட்டிற்கு வருகிறோம், நமது பாதையில் சில தடங்கல்களைக் காணும்போது.. 22. சற்றுமுன்பு பேசின இராணுவவீரர், மற்ற நாடுகள் ஏவுகணைகளை (missiles) கைவசம் வைத்திருக்கு மென்றும், அதை தாக்க நாமும் இராணுவயுக்தியைக் கையாண்டு ஏதாவதொன் றைக் கண்டு பிடிக்க வேண்மென்றும் கூறினார் 23. அதையே நாம் சபைக்குப் பொருத்தலாம். ஒரு மனிதன் சபையில் பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறார், அல்லது ஒரு சுவிசேஷகர் வெளியில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கு கிளர்ச்சி ஏதாகிலும் தொடங்கினால், அவர் தேவனுடைய ஊழியக்காராயிருப்பாரா னால், அது ஜனங்களின் சிந்தையில் நுழையாதபடி அதை தடுத்து. அவர்களை அதனின்று அகற்ற வேண்டும். அத்தகைய சூழ்நிலைக்கு நாம் ஆளாக விரும்புவதில்லை. 24. இங்கு எரேமியாவின் காலத்தில், அவனுடைய தீர்க் கதரிசனம்; ஏசாயா மரித்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் கழித்து அது நிகழ்ந்தது. அறுபது ஆண்டு காலமாக அவர் களுக்கு ஒரு பெரிய தீர்க்கதரிசி(Major prophet) இருக்கவில்லை. ஆபகூக் போன்ற சில சிறு தீர்க்க தரிசிகள் (Minor prophets) தோன்றினர். ஆனால் ஏசாயா தான் கடைசியாக தோன்றிய பெரிய தீர்க்கதரிசி. அவனுக்குப் பிறகு அவர்களுக்கு ஆலோசனை கூற யாருமேயில்லை. அதன் விளைவாக அவர்கள் அகன்று சென்று விட்டனர். இருப்பினும், அவர்கள் தேவனுடைய ஜனங்கள் அவர்கள் அகன்று சென்று, இப்பொழுது நாம் வேதத்தில் கண்ட அந்த நிலையையடைந்திருந்தனர். அந்த சமயத்தில் தான், அவர்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்க எரேமியா தோன்றி னான். அவர்கள் சிறைபிடிக்கப்படும் முன்பு அவன் தீர்க்கதரி சனம் உரைத்தான். அவனும் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களுடன் கொண்டு செல்லப்பட்டான், 25. எரேமியாவுக்குப் பிறகு தானியேல் தோன்றினான். அவர்கள் எழுபது ஆண்டு காலம் அங்கிருக்க வேண்டுமென்று வேத வாக்கியங்களின் மூலமாக அறிந்து கொண்டதாக தானி யேல் கூறினான். – 26. வேறொரு தீர்க்கதரிசி அவர்கள் மத்தியில் தோன்றி (அனனியா - தமிழாக்கியோன். எரே.28:2), எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்து, "அது சிறிய காரியம். இரண்டே ஆண்டு காலத்திற்குள் கர்த்தர் அவர்களை மீட்டுக் கொண்டு வந்து விடுவார்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். ஆனால் எரேமியாவுக்கோ அதனுடன் வேறுபாடு உண்டாயிருந்தது, தவறாக தீர்க்கதரிசனம் உரைத்த அந்த தீர்க்கதரிசிக்கு என்ன நேர்ந்ததென்று நாமறிவோம். அவ்வருஷத்திலே அவன் மரித் துப் போனான். கர்த்தர் அவனை உயிரோடு வைக்கவில்லை. 27. அக்காலத்தில் ஜனங்களின் நிலை என்ன,வாயிருந்த தென்று நாம் காண்கிறோம். நான் கூறப்போகும் வேதவாக்கி யங்களையும் குறிப்புகளையும் கொண்டு, நீங்கள் என்னைத் தவறா கப் புரிந்து கொள்ளக் கூடாதென்று விரும்புகிறேன். 28. முன்பெல்லாம் நான் வேதவாக்கியங்களைக் குறித்து வைக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. ஆனால் இரண்டாம் முறையாக இருபத்தைந்து வயதைக் கடந்த பின்பு (ஐம்பது வயதான பிறகு - தமிழாக்கியோன்) என்னால் முன் போல் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. எனவே நான் வேத வாக்கியங்களைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். அப்பொழுது நான் என்ன பேசுகிறேனென்று தெளிவாகிறது. மேலும் வியாதி யஸ்தருக்கு ஜெபம் செய்வதில் அதிக நேரம் கழிப்பதாலும். அடிக்கடி வெளியூர் போய் விட்டு வருவதாலும், நான் படிக்க வேண்டிய அளவுக்கு வேதத்தை ஆராய்ந்து படிக்க எனக்கு நேரமில்லை. 29. அக்காலத்தில் எரேமியா ஒரு பெரிய தீர்க்கதரிசி யாக விளங்கினான். அவன் ஆமோஸ், மற்றும் எழும்பின வேறு அநேக தீர்க்கதரிசிகளின் வகையைச் சேர்ந்தவன். அதாவது தேசத்தின் நிலையை அவன் கண்டபோது கலக்கமுற்றான். 30. ஒரு தேசத்தைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக் கும் போது, அது ஒரு சாராரை மாத்திரம் குறித்து சொல்லப் படுகிறது என்று நினைக்க ஏதுவுண்டு. அது அப்படியல்ல. அது பொதுவாக தேசத்தின் நிலையை அறிவிக்கிறது. எரேமியாவின் நாட்களிலிருந்த அதே நிலையை இன்று நாம் காண்கிறோம், அதாவது தேசம் தேவனை விட்டகன்று, ஏறக்குறைய விக்கிர காராதனைக்குச் சென்று விட்டது. அதற்கு காரணம் பிரசங்க பீடத்தின் மேலிருந்து கொண்டு பிரசங்கம் செய்பவர்களின் பலவீனமே. பிரசங்கிமார்கள் தேவனுடைய வார்த்தையில் உறுதியாக நின்றிருப்பார்களாயின், இங்கு நமது மத்தியில் தேவன் அசைவாடுவது போன்று, ஒவ்வொரு சபையிலும் அவர் இருந்திருப்பார். ஆனால் பிரசங்கிமார்களோ சபையோரை அதனின்று வெளியே நடத்திவிட்டனர். இதைக் குறித்து தான் இன்று காலை நான் பேச விரும்புகிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது அல்வாறே நிகழ்ந்து வந்துள்ளதென்று நாம் காணலாம். 31. ஆமோஸைக் குறித்து சற்று முன்பு நான் குறிப்பிட் டேனே, அவன் ஒரு தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் குமாரனுமல்ல என்று சொல்லிக்கொள்கிறான். அவன், “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்?'' என்கிறான், (ஆமோஸ் 3:8) 32. காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்கிறதை யாராகிலும் கேட்டதுண்டா? கூண்டுகளில் அடைபட்டு கிடக்கும் சிங்கங்கள் பூனையைப் போல், 'மியாவ்' என்று சத்தமிடுகின்றன. ஆனால் காட்டிலுள்ள சிங்கம் கெர்ச்சித்தால், அங்குள்ள எல்லாமே நிசப்தமாக அதை கவனித்துக் கேட்கின்றன. சிங்கத்தை வேட்டையாட நான் காட்டில் பதுங்கியிருந்ததுண்டு. சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் ராஜா. அது கெர்ச்சிக்கும் போது, வண்டுகள் கூட ரீங்காரம் செய்வதை நிறுத்தி விடும்- எல் லாமே நிறுத்திவிடும். நரிகள், மற்ற மிருகங்கள், குரங்குகள், எல் லாமே காட்டில் ஊளையிட்டும் சத்தமிட்டுக் கொண்டுமிருக் கும். ஆனால் தூரத்தில் ஒரு சிங்கம் கெர்ச்சிக்கட்டும். உடனே எல்லாம் அமைதியாகி விடும். வண்டுகளும் ரீங்காரம் செய் வதை நிறுத்திவிடும். எல்லாமே அதற்கு பயப்படுகின்றன. ஆனால் எத்தனையோ மிருகங்கள் அதைக் கொல்ல சக்தி வாய்ந்துள்ளன. ஆயிலும் அதுவே மிருகங்களுக்கெல்லாம் ராஜா என்று கருதப்படுகின்றது. 33. ஆமோஸ், ''சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படா திருப்பான்?'' என்று சொல்கிறான். மேலும் அவன், "கர்த்த ராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லா திருப்பான்?'' என்கிறான் (ஆமோஸ் 3: 8). . 34. அதுவே இக்காலத்து நிலையின் சவாலை சந்திக்கிறது. கர்த்தர் பேசுகிறார், பாருங்கள்? இப்பொழுது நாம் கையெழுத்தை சுவரில் காண்கிறோம். எனவே நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று தீர்க்கதரிசனம் உரைப்பது எளிதாயுள்ளது.) 35. தேவன் தாமே கத்தோலிக்க ஸ்தாபனம் தொடங்கி பிராடெஸ்டெண்டுகள் ஸ்தாபனம் முழுவதிலும், இந்தியாவி லுள்ள புத்த மதத்தினரிடையிலிருந்தும் கூட தமது ஜனங்களை அழைத்து அவர்களை ஒன்று சேர்க்கிறார். அந்த நாள் வரு கிறதை நான் காண்பதால் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். அது மகத்தான நாள்- பெரிதான சிலாக்கியங்களில் ஒன்று. 36. தேவனுடைய ஒரு பாகமாக நாம் ஆத்துமாக்களாக இருந்தபோது உலகம் என்பது ஒன்றுண்டு என்று நான் அறிந் திருந்தேனானால்-உலகத்தோற்றத்துக்கு முன்பே நாம் அவருக் குள் இருந்தோம். ஏனெனில் ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமே யுண்டு. அது தான் தேவன். நாம் அவருடைய ஒரு பாகமாக இருந்தோம், நமக்கு அப்பொழுது உருவம் கிடையாது, சிந்திக்க முடியாது, ஆனால் உலகத்தோற்றத்துக்கு முன்பே நாம் அவருடைய சிந்தையில் இருந்தோம். நாம் அவருடைய ஒரு பாகமாக இருக்கிறோம்-என் மகன் என்னுடைய ஒரு பாகமாக இருப்பது போலவும், 'நான் என் தந்தையின் ஒரு பாகமாக இருப்பது போலவும், அவருடைய முன்னறிவின்படி நாம் தேவனு டைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். 37. நான் அவருடைய சிந்தையிலிருந்தபோது, இப் பொழுது அறிந்துள்ளபடி அப்பொழுது நான் அறிந்திருந்து, காலம் முழுவதையும் என்னால் காண முடிந்து, அவர் என்னிடம் ''நீ எந்த காலத்தில் வாழ விரும்புகிறாய்?'' என்று கேட்டிருப் பாரானால், நான், “இந்த காலத்தில்'' என்று விடையளித் திருப்பேன்-உலக சரித்திரம் முடிவு பெற்று, தேவனுடைய ராஜ்யம் பூமியில் நிலை நாட்டப்படவிருக்கும் இக்காலத்தில், இக்காலம் தான் எல்லா காலங்களைவிட மிகவும் மகிமையுள்ள காலம் என்று கருதுகிறேன். 38. தீர்க்கதரிசியை தேவன் நியமித்து அவனை வெளியே அனுப்பினபோது, அவன் இஸ்ரவேல் ஜனங்களைக் குற்றஞ் சாட்டினான் என்று காண்கிறோம். அவர்கள் இரண்டு பெரிய பாவங்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றனர். அவர் கள் புரிந்த இவ்விரு பாவங்களைக் குறித்து இன்று நாம் பேச எத்தனித்துள்ளோம். அதிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். அவர்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டு விட்டு, தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த தொட்டி களில் வெடிப்புகள் உண்டாகி அவை ஒழுகிக் கொண்டிருந்தன, 39. வெடிப்புள்ள (Broken-உடைந்த) தொட்டிகளில் தண்ணீர் நிற்க முடியாது. அது ஒழுகிவிடும். நான் ஒரு பண்ணை யில் வளர்ந்தேன். எனவே தொட்டிகள் எப்படியிருக்குமென்றும் அதனால் நமக்கு என்ன தொல்லைகள் ஏற்படுமென்றும் எனக் குத் தெரியும். 40. தண்ணீர் ஒழுகும் இந்த தொட்டி இந்நாளுக்கு அருமையான உதாரணமாய் அமைந்துள்ளது. இன்று நாம் முயன்று வந்துள்ள எல்லாமே, மனிதரை ஒன்று சேர்க்கவும், சபைகளை ஒன்று சேர்க்கவுமே. இவையனைத்தும் மனித ஞானம் கொண்டு கடைபிடித்த முயற்சிகளாம். நாம் மெதோடிஸ்டுகளை பாப்டிஸ்டுகளாகவும், பாப்டிஸ்டுகளை மெதோடிஸ்டுகளாகவும், இவ்வாறு வெவ்வேறு ஸ்தாபனத்தாரை மற்ற ஸ்தாபனங்களில் சேர்க்கவுமே நாம் முயன்று வந்துள்ளோம். முதலாவதாக, அது தேவனுடைய திட்டமேயில்லை. 41. தேவனைச் சந்திக்கக் கூடிய இடம் ஒன்று மாத்திரமே யுள்ளது. யாத்திராகமத்தில் அவர், “என் நாமத்தை வைக்க ஒரு ஸ்தலத்தை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்த ஸ்தலத்தில் மாத்திரமே நான் ஜனங்களை சந்திப்பேன்' என்று கூறியுள்ளார். அவருடைய நாமம் விளங்க அவர் ஒரு ஸ்தலத்தை தெரிந்துகொண்டார். தமது நாமத்தை அவர் எங்கு வைத் திருந்தாரோ, அங்கு தான் அவர் இஸ்ரவேல் ஜனங்களை சந்தித் தார். இன்று தமது சபையை சந்திக்க அவருக்கு ஓரிடமுண்டு. அந்த நாமத்தை அவர் தெரிந்துகொண்டார். அந்த நாமம் தான் இயேசுகிறிஸ்து. அவ்விடத்தில் தான் அவர் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் உண்மையான விசுவாசியை சந்திக் கிறார். தமது நாமத்தை வைக்க அவ்விடத்தை தான் தேவன் தெரிந்து கொண்டார். நீங்கள் “தேவனுடைய நாமமா?'' எனலாம். 42. இயேசுகிறிஸ்து, ''நான் பிதாவின் நாமத்தினாலே வந்தேன்'' என்றார் (யோவான் 5:43). எனவே அங்கு தான்கிறிஸ்துவில் தான்--தேவன் தமது நாமத்தை வைத்தார். கிறிஸ்துவில் தான் நாம் அனைவரும் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் ஒன்று கூடி உண்மையாக ஐக்கியங் கொள்ளமுடியும். 43. மனிதனை எந்தவிடத்தில் சந்திக்க வேண்டுமென்று தேவன் தொடக்கத்திலேயே ஏதேன் தோட்டத்தில் தமது திட்டத்தை வகுத்தார். அது மனித ஞானம் கொண்டதல்ல அப்படியிருந்திருந்தால், ஏவாள் தேவனுடைய திட்டத்தில் அமைந்திருப்பாளே! "தேவன் நிச்சயமாக அப்படி செய்ய மாட்டார்' என்னும் சாத்தானின் புத்திகூர்மையான கருத்தை அவள் ஏற்றுக் கொண்டாளென்று நாமறிவோம். ஆனால் தேவனோ, ''நான் நிச்சயம் செய்வேன் என்று கூறியிருந்தார். பின்பு அவர் மீட்பிற்கான இடத்தை தெரிந்துகொண்டார். அது இரத்தத்தின் மூலமேயன்றி, நுண்ணறிவின் கருத்தின் அடிப்படையில் அல்ல. 44. எனவே நாம் விருதாவாய் இவைகளை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி செய்வது மனித இயல்பாகும். நமக்கு நேரமிருந்தால், அதை தெளிவாக விளக்கலாம். ஆனால் என் வாயில் பொத்தானை சுவைத்து அதிக நேரம் எடுக்க எனக்கு விருப்பமில்லை. எனவே "தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள்' என்னும் பொருளை கூடிய மட்டும் எளிதாக்க விரும்புகிறேன். அது மறுபடியும் நிகழ்ந்துள்ளது. அது நாம் வாழும் இக்காலத்தை அருமையாக சித்தரிக்கிறது-நமது சுயமுயற்சியினால் எல்லாவற்றையும் நாம் செய்ய நினைக்கும் இக்காலத்தை. 45. இயேசுகிறிஸ்துவின் நாமத்தை உச்சரிக்கும் தேவனு டைய ஊழியக்காரர் எவரையும் நான் அவமதிக்க எண்ண வில்லை, அவருடைய நாமத்தை அவர் பயபக்தியுடன் உச்சரிக்கும் அந்த ஒரு காரணத்திற்காவது அவரை நாம் கெளரவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இக்கடைசி நாட்களில் பூமியின் எல்லை. முடிய சென்றுள்ள சுவிசேஷ முறைகள் அனைத்தின் மூலமாக நாம் ஜனங்களை ஒருமனதுடன் ஒன்றுசேர்க்க இயலாதென்று எண்ணுகிறேன். அவர்களை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் நாம் கொண்டு வந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். அந்த ஓரிடத்தில் மாத்திரமே நாம் பாதுகாப்பாக இருப்போம். 46. அண்மையில் கிழக்கு பாகத்திலுள்ள ஒருவர் என்னி டம் தோலைபேசியில், "சகோ. பிரான் ஹாமே, நீங்கள் அரிசோனா வுக்குச் செல்வதாகவும். அங்கு பாதுகாப்பான இடம் ஒன்றை நீர் அமைத்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன்'' என்றார். தேவனிடமிருந்து செய்தி எப்படி வந்ததென்றும், அலாஸ்காவில் என்ன நேரிடுமென்று தேவன் என்னிடம் முன்னுரைத்ததையும், எப்படி கலிபோர்னியா முழுவதிலும் அது நேரிடுமென்று அவர் கூறினதையும் நீங்கள் அறிவீர்கள். அது அவ்வாறே நிறைவேறினது. அவர்கள், ''அது பூமியதிர்ச்சியினால் குலுங்கினால், பாதுகாப்பான மண்டலம் எங்கு தான் உள்ளது?'' என்று கேட்டனர். 47. நான், "எனக்குத் தெரிந்த பாதுகாப்பான மண்டலம் ஒன்று மாத்திரமே. அது கிறிஸ்துவுக்குள்" என்றேன். “கிறிஸ்து வுக்குள் இருப்பவர்கள்... அது ஒன்று மாத்திரமே நானறி வேன். 48. எரேமியா “புலம்பும் தீர்க்கதரிசி'' யென்றும் அழைக்கப்பட்டான். அந்த தீர்க்கதரிசியைப் புலம்பச் செய்தது என்னவெனில், அவன் தீர்க்கதரிசியாயிருந்த காரணத் தால் (தேவனுடைய வார்த்தை அப்படிப்பட்ட தீர்க்கதரிசி களிடம் வருகிறது), ஜனங்கள் தங்கள் பாரம்பரியங்களைக் கடை பிடித்து, அதே சமயத்தில் அவர்கள் போகும் வழி சரியென்று எண்ணியிருந்ததை அவன் கண்டான். அவர்களைத் திருத்த ஒரு வழியும் இல்லை. 49. அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட வேண்டியவர்கள். ஏனெனில் யாராயிருப்பினும், நாம் விதைக் கிறதையே அறுப்போம் என்று நாமறிவோம். நாம் தேசமாக விதைத்துவிட்டோம். எனவே நாம் விதைத்ததை நிச்சயம் அறுக்கவேண்டியவர்களாயிருக்கிறோம். கர்த்தருக்குச் சித்த மானால் நாளை மாலை 'பிரசவ வேதனை' என்னும் பொருளின் பேரில் பேசவிருக்கிறேன். அப்பொழுது இதைக் குறித்து பேசுவேன். நாம் தப்பமுடியாது. நாம் விதைத்ததை அறுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 50, தாறுமாறாக்கப்பட்ட கிறிஸ்தவ மார்க்கத்தை அனு சரிக்கும் நம்மை தேவன். தப்ப விடுவாரானால்; கிறிஸ்தவ மார்க் கம் என்னும் பெயரில் நாம் ஜனங்களை வழி தவறச் செய்துள் ளோமே! சகோ. மூர் ஒரு முறை, “அவர் அப்படி நம்மை தப்ப விட்டால், அவர் சோதோம் கொமொராவை மறுபடியும் எழுப்பி, அதை தீக்கிரையாக்கினதற்காக அதனிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறார்' என்று கூறினார். அது உண்மை . ஏனெனில் தேவன் இன்னும் நீதியுள்ளவராயிருக்கிறார். அவருடைய பரிசுத்தத்துக்கும் வார்த்தைக்கும் பங்கம் விளை விக்கும் அநீதியை அவர் காணும்போது, ஜனங்கள் விதைத்ததை அறுக்கும்படி செய்கிறார். நாம் நிச்சயம் அப்படி செய்ய வேண்டும், . 51. கவனியுங்கள், அவர்கள் ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டு விட்டு, தங்களுக்கு தொட்டிகளை வெட்டிக் கொண்டார்கள். 52. இங்குள்ள சிலருக்கு தொட்டி (cistern) என்றால் என்ன வென்று தெரியாமல் இருக்கலாம். தொட்டியென்பது மனிதனால். உண்டாக்கப்பட்ட ஒரு குளம் (tank). அது கிணற்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்படுகின்றது. அது யாரோ ஒருவர் தோண்டினதால் உண்டானது. எத்தனை பேருக்கு தொட்டி யென்றால் என்னவென்று தெரியும்? நல்லது, சரி. இன்று காலை கிராமப்புறத்திலிருந்து வந்துள்ள அநேகர் இங்குள்ளனர். எனவே அவர்கள்.., நான் தங்கியிருந்த இடத்திலிருக்கும், தொட்டி என் நினைவுக்கு வருகிறது. அதிலுள்ள தண்ணீரைக் குடிக்க நான் எப்பொழுதுமே பயந்ததுண்டு. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு குளம். அது நம்பக்கூடியதல்ல. 53. மனிதன் செய்யும் எதுவுமே அவ்வளவு நல்லதல்ல. ஆனால் கர்த்தர் சிருஷ்டித்தவைகளைப் பாருங்கள், அவர் பூமியை அதன் சுற்றில் (orbit) வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் பிழையின்றி சுற்றி வருகின்றது. சூரியன் அஸ்தமிக்க ஒரு போதும் தவறியதில்லை. ஆனால் நம்மிடமுள்ள சிறந்த கடிகாரங்களும் கூட, ஒரு மாதத்தில் எத்தனையோ நிமிடங்களை இழந்து விடுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. பாருங்கள், தேவன் படைத்த அனைத்துமே பிழையின்றி அமைந்துள்ளன. ஆனால் மனிதன் செய்பவை அனைத்துமே பிழையுள்ளதாய் அமைந்துள்ளன. அப்படியிருக்க, பிழையற்ற ஒன்றை நாம் பெற்றுக் கொள்ள முடியும் போது, மனிதன் செய்யும் பிழை யுள்ள காரியங்களை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? 54. பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நம்மைக் குறித்து நான் எப்பொழுதுமே கூறி வந்துள்ளேன். தேவனுடைய ஒழுங்கிலிருந்து நாம் விலகினவர்கள் அல்ல என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் நமது மத்தியில், வேறொருவரை பாவனை செய்யும் ஜனங்கள் உள்ளனர் என்று நமக்குத் தெரியும். அது மனித இயல்பு. அவர்கள் அப்படி செய்ய முனை வார்கள். அவ்வாறு செய்ததாக வேதத்திலும் கூட நாம் காண்கிறோம். ஒருவன் '' நான் பவுலைச் சேர்ந்தவன்'' என்றான். மற்றொருவன் '' நான் சீலாவைச் சேர்ந்தவன்'' என்றான். வேறொருவன் செய்ததை அல்லது செய்து கொண்டிருப்பதை அவர்களும் பாவனை செய்ய முயன்றனர், 55. ஆகாயம் முழுவதும் உண்மையானவைகளால் நிரம்பி யிருக்க, நீங்கள் ஏன் போலிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்? "வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்'' அளிக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் ஏன் வேறொன்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்? வேதாகமம் தேவனுடைய கலப் படமில்லாத வார்த்தையாக அமைந்திருக்கும் போது, நீங்கள் ஏன் மனிதனுடைய பிரமாணங்களையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்? "இதனுடன் ஒருவன் எதையாகி லும் கூட்டினால், அல்லது இதிலிருந்து எதையாகிலும் எடுத் துப்போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்'' என்று கர்த்தராகிய இயேசு வெளி. '22:18ல் கூறியிருக்க, நீங்கள் ஏன் கூட்டவோ அல்லது எடுத்துப் போடவோ முயல்கிறீர்கள்? 56. மானிடவர்க்கத்தை தேவன் முதன் முறையாக, பூமியில் வைத்த போது, அவர்கள் தேவனுடைய வார்த் தையை அனுசரித்து வாழவேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிட்டார். தேவனுடைய வார்த்தை ஒரு சங்கிலியைப் - போன்றது, அதைப்பிடித்துக் கொண்டு நீங்கள் நரகத்தை கடக்கிறீர்கள். சங்கிலியானது. அதன் பலவீனமான இணைப் பில் (link) தான் பலமாயுள்ளது. அதன் ஒவ்வொரு வார்த்தை யையும் நாம் கைக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்பு கிறார். அதுவே அவர்களுக்களிக்கப்பட்ட முதலாம் வேதாகமம். அவர்கள் ஒரே ஒரு வார்த்தையை சங்கிலியிலிருந்து முறித்துப் போட்டதால், மானிட வர்க்கம் முழுவதுமே மரணம் என்னும் அந்தகாரத்துக்குள் விழுந்து விட்டது. 57, இயேசு வேதாகமத்தின் மத்தியில் தோன்றி "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயி லிருந்து புறப்படுகிற, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப் பான்” என்றார் (மத்.4:14) - வார்த்தையின் ஒரு பாகமல்ல, அல்லது நூற்றில் தொண்ணூற்றொன்பது அல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும். ஆதாமும் ஏவாளும் அந்த நிபந்தனையின் அடிப்படையில் தான் இருந்தனர். 58. வேதாகமத்தின் கடைசியில், வெளி.22:18ல் அவர், "இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால்...'' என்றார், 59. தேவனுடைய சொந்த கருத்து இவ்வாறு இருக்கும் போது, நாம் ஏன் வேறொருவரின் கருத்துக்களைப் புகுத்த வேண்டும்? அவர் கூறினதையே நாம் ஏற்றுக் கொள்ள விரும்பு கிறோம், “தேவனே சத்தியபரர் “என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் நாம் சொல்வோமாக'' என்று எழுதி யிருக்கிறது (ரோமர் 3:4). 60. தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் காலத்திலும் அதுவே பிரச்சினையாக இருந்தது, எரேமியாவின் நாட்களில், எரேமியா தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். ஆனால் இந்த மனிதன் (அனனியா - தமிழாக்கியோன்) வேறெதோ ஒன்றைப் புகுத்த முயன்றான். அது நம்பிக்கைக்குரியதல்ல. இந்த தொட்டிகளை நான், தேவனுடைய மூலவார்த்தைக்குப் பதிலாக அதன் ஸ்தானத்தை வகிக்க நாம் தேர்ந்தெடுத்துள்ள ஸ்தாபன முறைமைகளுடன் ஒப்பிடுகிறேன். 61. தேவனுடைய வார்த்தையின் ஸ்தானத்தை வேறெது வும் வகிக்க முடியாது. அது தேவனாயுள்ளது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்ச மாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' (யோவான் 1:1,14). ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்' என்று எபி.13:8 உரைக்கிறது. அதை நாம் எப்படி தள்ளி விடமுடியும்? அது சத்தியமாக இருக்க வேண்டும். அவர் மாறாதவராயிருந்து வருகிறார். ஒவ்வொரு கொள்கையிலும் அவர் மாறாதவராகவே இருக்கிறார். 62. அதன் காரணமாகத் தான் பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், கத்தோலிக்கர், பிரஸ்பிடேரியன்கள், மற்றும் வெவ்வேறு ஸ்தாபனங்களைச் சேர்ந்த நீங்கள் அந்த அவருடைய பிரசன்னத்தை அனுபவித்து வருகிறீர்கள், உங்களுக்குள் ஏதோ ஓரிடத்தில் நீங்கள் தேவனை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஒருக்கால் சில நேரங்களில், உங்கள் அறிவின் மூலமாக நீங்கள் தேவனுடைய வல்லமையை உணர்ந் திருக்கலாம், அதன் மூலம் நீங்கள் தேவனுடைய ஊழியக்கார ராகியிருக்கக் கூடும். ஆனால் நீங்கள் உண்மையாக தேவனுக் குள் வந்து, அவருக்குள் தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தி, என்னும் உங்கள் ஸ்தானத்தை அடையாளம் கண்டு கொள்ளும்போது, அது தான் தேவன் நீங்கள் பெறவேண்டும் மென்று தீர்மானித்துள்ள அந்த சிலிர்ப்பை (thrill) உங்களுக்குக் கொண்டு வருகிறது. 63. பரி. மாற்கு 16ம் அதிகாரத்தில் இயேசு, "நீங்கள் உலகமெங்கும் போய் கற்றுக் கொடுங்கள்'' என்று கூறவில்லை யென்று நாம் கவனிக்கிறோம். அவர், “சுவிசேஷத்தைப் பிரசங்கி யுங்கள்” என்று தான் கூறினார். சுவிசேஷத்தைப் பிரசங்கித் தல் ' என்பது, பரிசுத்த ஆவியின் வல்லமையை அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள் படும். ''நீங்கள் உலகமெங்கும் போய் பரிசுத்த ஆவியின் வல்லமையை வெளிப்படுத்துங்கள்.'' 64. இந்தியாவிலுள்ள பம்பாயில் என் கூட்டத்தை ஒழுங்கு செய்த அந்த சகோதரனுடன் பேசிக் கொண்டிருந் தேன். தென் ஆப்பிரிக்கா மற்றும் வெவ்வேறு நாடுகளிலும் கூட மிஷனரிமார்கள் தேவனுடைய வார்த்தையை மனித அறிவின் கருத்தின் அடிப்படையில் கற்பித்து வந்துள்ளனர். ஆனால் கூட்டத்தில் ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, அவரே முப்பதாயிரம் 'கம்பளி. சுதேசிகளை' ஒரே பீட அழைப்பில், அவர்கள் நின்று கொண்டிருந்த அதே மைதானத் தில் இரட்சித்தார். இவ்வுலகில் பிறக்கும் நேரத்தில் நிர்வாண. மாக' இருப்பது போலவே அந்த பெண்கள் அங்கு நிர்வாண மாக நின்று கொண்டிருந்தனர். ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள அவர்கள் கையுயர்த்தின அதே நிமிடத்தில்.... 65. பரிசுத்த ஆவியானவர் அவ்விடத்தில் இறங்கி வந்து சக்கர நாற்காலிகளிலும் டோலிகளிலும் (stretchers) இருந்தவர் களையும், மற்ற பிணியாளிகளையும் 25000 பேர்களை சுகப்படுத்தி னார். அந்த பட்டினத்தின் நகரத்தலைவர் (mayor) அடுத்த நாள் வாகனங்களில் கக்க தண்டங்கள், டோலிகள் நிறைத்து எடுத்து செல்லப் படுவதைக் காணும்படி என்னை அழைத்தார். 66. அந்த பெண்கள் நிர்வாணிகளாய் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நிர்வாணிகளென அறியாமலிருந். தனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தாக்கின. மாத்திரத்தில், அவர்கள் கைகளை மடக்கி மறைத்துக்கொண்டு ஆண்களின்” சமூகத்தினின்று விலகி சென்று விட்டனர். 67. அப்படியிருக்க, அமெரிக்காவிலுள்ள நாம் எப்படி நம்மை கிறிஸ்தவ நாடென்று தேவனுடைய சமூகத்தில் அழைத்துக் கொள்கிறோம் என்று வியப்புறுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நமது பெண்கள் அதிகமான ஆடைகளைக் களைகின்ற னர். உண்மையில் நீங்கள் அதிகமான ஆடைகளை அணிய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவை அதிக மாக தரித்தால், உங்கள் நிலையை நீங்கள் அதிகமாக உணருகிற வர்களாக இருப்பீர்கள். சில நேரங்களில் ஜனங்கள் வீதிகளில் நடக்கும் விதத்தைக் காணும்போது, அவர்களுக்கு புத்திசுவா தீனம் உள்ளதா என்று வியப்புகிறேன். அவர்கள் அவ்விதம் நடந்து கொள்ளும் போது, அவர்கள் பிசாசுக்கு கண்ணியாக அமைந்து, ஆத்துமாக்களை நரகத்துக்கு அனுப்புகின்றனர் என்பதை உணராமலிருக்கின்றனர். அது உண்மை . உலகம் எரேமியாவின் நாட்களில் இருந்தது போலவே, இக்காலத்தி லும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. 68. இப்பொழுது தொட்டிக்கு மறுபடியும் வருவோம். தொட்டியை நாம் நம்ப முடியாது. ஏனெனில் அது தானாகவே நிறைய முடியாது. அது நிறைவதற்காக உள்ளூர் மழையை, உள்ளூர் எழுப்புதலை சார்ந்திருக்க வேண்டும். அது நிறைவதற் காக இங்கு ஒரு சிறு எழுப்புதல், அங்கு ஒரு சிறு எழுப்புதலின் பேரில் அது சார்ந்திருக்க வேண்டியதாயுள்ளது. எனவே அதை நம்ப முடியாது. அது தானாகவே நிறையாது. அது தன்னில் தானே போதாததாயுள்ளது. அது நிறைவதற்காக மழையைச் சார்ந்திருக்க வேண்டியதாயுள்ளது. 69. அந்த தொட்டி எங்கிருந்து தண்ணீரைப் பெறுகிற தென்று பார்ப்போம். மழைத்தண்ணீர் அழுக்கும் தூசும் நிறைந்த தானியக்களஞ்சியத்தின் வழியாகவும், லாயங்களின் வழியாகவும் வருவதால், அழுக்கையும் தூசியையும் அது கழுவிக் கொண்டு வந்து, மனிதனால் உண்டாக்கப்பட்ட அந்த தொட்டியில் நிறைகிறது. அது ஏறக்குறைய சாக்கடைக் குழியைப் போல் ஆகிவிடுகின்றது. தானியக்களஞ்சியங்களின் முற்றத்தில் மிருகங்கள் அசுத்தம் செய்து, அங்கு துர்நாற்றம் உண்டாயிருக்கும். காற்று தூசை அடித்துக் கொண்டு வந்து களஞ்சியங்களில் சேர்க்கும். பின்பு உள்ளூர் மழை இவையனைத் தையும் கழுவிக்கொண்டு வருகிறது. 70, இந்த அழுக்கு மழைத்தண்ணீர் நீர்க்குழாயின் வழியாக மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியை அடைகின்றது. அங்கு வந்து சேரும்போது அது மிகவும் அழுக்காயுள்ளது. அதை வடிகட்டாமல் யாருமே குடிக்கமுடியாது, அது கூரைகளைக் கழுவி, மனிதனால் உண்டாக்கப்பட்ட குழியை அடைந்து, அங்கிருந்து மனிதனால் உண்டாக்கப்பட்ட நீர்க்குழாயின் வழியாக, மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியை அடை கின்றது. அதன் மேல் மனிதனால் உண்டாக்கப்பட்ட வடிகட்டும் கருவியை வைத்து, கிருமிகளும் மற்றவைகளும் தொட்டியை அடையாமல் தடுக்கப்படுகின்றது. 71, மனிதனால் உண்டாக்கப்பட்ட இந்த ஸ்தாபனங்களில், அல்லது தொட்டிகளில் இந்த தண்ணீர் வந்து சேர்ந்த சில நாட்களுக்கெல்லாம்! என்னை மன்னிக்கவும், என்னை மன்னிக் கவும். சரி, எல்லா விதமான வேததத்துவங்களும் கழுவப்பட்டு அந்த தொட்டியை அடைந்த சில நாட்களுக்குப் பிறகு, அது தேங்கிக் கிடந்து (stagnant). அசுத்தமாகி விடுகிறது. 72. சபையின் சரித்திரம் அறிந்துள்ள எவரும், தேவன் ஒரு செய்தியை அனுப்பும் போது, அது தேவனிடமிருந்து புதிதாக (fresh) வருகிறதென்பதை அறிவர். அந்த செய்தியை நிலை நாட்டினவரின் காலத்துக்குப் பின்பு அவர் யாராவது இருக்கலாம். அவரை நீங்கள் சீர்த்திருத்தக்காரர் என்றோ அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். அவருடைய மறைவுக்குப் பிறகு அவர்கள் சில முறைமைகளை வகுத்து, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர், அவர்கள் அவ்வாறு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட மாத்திரத்தில், அது அங்கேயே செத்து விடுகிறது. அதன் பின்பு அது எழும்புவதேயில்லை, காலங்கள் தோறும், ஒவ்வொரு சமயமும், அது அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளது. 73. இங்குள்ள கத்தோலிக்க குருவானவருக்கு மரியாதை செலுத்தி; தேவன் ஒரு சபையை ஸ்தாபித்த போது.., தேவன் ஸ்தாபனம் உண்டாக்குவது கிடையாது. தேவன் எக்காலத்தும் ஒரு சபையை ஸ்தாபித்ததில்லை. அவருக்கு அந்த வேலை கிடையாது. ஸ்தாபிப்பது என்பது அவருடைய இயல்பல்ல. தேவன் பெந்தெகொஸ்தே நாளன்று சபையைத் துவக்கி வைத்தார். முடிவில் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அங்கு தான் அது தன் வல்லமையை இழந்து விட்டது. 74. பிறகு நாம் லூத்தரன் சீர்திருத்தத்திற்கு வருகிறோம், அது ஒரு மகத்தான காரியமாயிருந்தது. "'விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்' என்னும் தேவனுடைய வார்த்தை அப்பொழுது அளிக்கப்பட்டது. தேவனுடைய அனைத்தையும் ஒன்றாக தெரிந்துகொண்டு அணிவகுத்து முன்செல்வதற்குப் பதிலாக, அவர்கள் லூத்தரன் சபை என்னும் ஒன்றை, ஸ்தாபித்துக்கொண்டு, மற்ற குழுவிலிருந்து பிரிந்து சென்றனர். அப்பொழுதே அது செத்துவிட்டது 75. அதன் பின்பு தேவன் வெஸ்லியை “பரிசுத்த மாக்கப்படுதல் என்னும் செய்தியுடன் எழுப்பினார். அது கிருபையின் இரண்டாம் பணியாக இருந்தது. அது அற்புத மாயிருந்தது. ஆனால் வெஸ்லிக்கும் ஆஸ்பரிக்கும் பிறகு அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டனர். அது செத்துப் போனது, 76. பிறகு வரங்கள் புதுப்பிக்கப்படுதல் என்பதுடன் பெந்தெகொஸ்தேயினர் தோன்றினர். அவர்கள் நன்றாகவே இருந்து வந்தனர். ஆனால் என்ன நேர்ந்தது? அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அது செத்துப் போனது. நிச்சயமாக. 77. இப்பொழுது இவையனைத்தின் மத்தியிலிருந்து தேவன் இன்னமும் அந்த சந்ததி ஒவ்வொன்றிலுமிருந்தும் மீதியானவர் களை அழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் வெளிவந்து ஒன்று கூட வேண்டிய நேரம் இதுவே. இந்த விஷயத்தில் முழு சுவிசேஷ வர்த்தகர்கள் ஒரு முக்கிய பாகம் வகிக்கிறனர் என்று கருதுகி றேன். அவர்கள் பிரிவினையாகிய சுவர்களைத் தகர்த் தெறிந்து, 'நமக்குள் எவ்வித வேறுபாடும் கிடையாது. நாமனைவரும் ஒன்றுகூடி, ஓரே கொள்கையின் கீழ் தேவனை வழிபடுவோம்ஓரே ஸ்தாபனத்தின் கீழ் அல்ல' என்கின்றனர், இது ஸ்தாபன மாக இருக்குமானால், இப்பொழுதே நான் மேடையை விட்டு இறங்கி விடுவேன். எனக்கு அதனுடன் எவ்வித தொடர்பும். இராது. 78, அது என்ன? அது ஒரு ஐக்கியமாக இருக்கவேண்டும். ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையிலுள்ள ஐக்கியமல்ல. அது. ஆனால் உயிர்த்தெழுதலின் வல்லமையின் அடிப்படையில், கிறிஸ்துவில் கொண்டுள்ள ஐக்கியம். அது தான் ஜீவனைக் கொண்டு வருகிறது, அது மறுபிறப்பைக் கொண்டு வருகிறது. 79, பிறப்பு ஒன்று வருவதற்கு முன்பு மரணம் ஒன்றிருக்க, வேண்டுமென்று நாம் உணருகிறோம். பிறப்பு என்பது ஒழுங்கின்மை (mess). அது எந்தவித பிறப்பாயிருந்தாலும் சரி. அது பன்றி தொழுவத்தில் நேர்ந்தாலும், எங்கு நேர்ந்தாலும், அது ஒழுங்கின்மையே. மறுபிறப்பு என்பதும் அவ்வாறே அமைந்துள் ளது. நீங்கள் சாதாரணமாக செய்ய நினைக்காத செயல்களை யெல்லாம் அது செய்யத் தூண்டுகிறது. நீங்கள் உங்களுக்குள் மரிக்க ஆயத்தமாகும்போது, நீங்கள் மறுபடியும் பிறந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாகின்றீர்கள். அப் பொழுது காரியங்கள் திறக்கப்பட்டு தெளிவாக்கப்பட்டு, உங்கள் ஜீவன் உங்களுக்குப் புதிய பார்வையை அளிக்கிறது. ஏனெனில் நீங்கள் இயேசுகிறிஸ்து என்னும் நபரை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்-ஏதோ ஒரு தத்துவத்தையோ அல்லது கோட்பாட்டையோ அல்ல. 80. எழுதப்பட்டடுள்ள தேவனுடைய வார்த்தையும் கூட பரிசுத்த ஆவியால் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் வேத தத்துவத்தை எவ்வளவாகக் கொண்டிருந்தாலும், அது மரித்த நிலையிலே அங்கேயே கிடக்கிறது. என் கை நிறைய கோதுமை மணியை நான் வைத்திருக்கலாம். ஆனால் உயிர்ப்பிக்கப்படக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு அதைக் கொண்டு வராமல், அது உயிர் பெற முடியாது. அது போன்று, நீங்கள் வேதபாண்டித் யம் அடைந்து, டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கலாம். உங்களுக்கு விருப்பமான எந்த பட்டத்தையும் நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதன் மேல் வந்து அதை உயிர்ப்பித்துத் தராமல், உங்களுக்கும் தனிப்பட்ட முறையில் தேவனுடன் அனுபவம் இராமற் போனால், கோதுமை மணியினால் எவ்வித பயனுமில்லை. நீங்கள் வீணாக அதை கற்கின்றீர்கள். 81. அன்றிரவு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் சொன்ன விதமாக- அதைக் கேட்டு நான் அதிசயமுற்றேன். கிறிஸ்துவை அறிந்து கொண்டு, அவர் செய்ய நினையாத காரியங்களைச் செய்ய, பவுலைப் போல் அவருடைய கல்வியனைத் தையும் அவர் மறக்க வேண்டியதாயிருந்தது என்று அவர் கூறினார். 82. தேவன் அந்த முறையைத்தான் கையாளுகின்றார். நம்முடைய கல்வி முறையில் அவர் நம்மை இழிவு படுத்து கிறார், அறியாமையை நான் ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். இவையிரண்டுக்கு மிடையேயுள்ள வேறுபாட்டையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். கல்வி ஒருக்காலும் ஜீவனைக் கொண்டு வராது. ஜீவனைக் கொண்டு வர தேவனுடைய ஆவி அவசியம். அந்த ஜீவன் புத்தி கூர்மையை அடிப்படையாகக் கொண்ட எழுப்புதலினால் வருவது கிடையாது. அது வேதத்தி லிருந்து, 'வார்த்தை எழுப்புதலின்' மூலம் வரவேண்டும். அந்த வார்த்தை நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயுள்ளது. இன்றைக்கும் அது நிலத்தில் விழுந்து உயிர்ப்பிக்கப்படுமானால், அப்போஸ்தலர் 2ல் கிடைக்கப்பெற்ற அதே பெலனை இன்றும் நீங்கள் பெறுவீர்கள். நிச்சயமாக. அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அது இனிமேலும் அவ்வாறே இருக்கும். ஏனெனில் தேவனுடைய ஆவியானவரே அப்படிப்பட்ட சூழ் நிலையை உருவாக்குகிறார். 83. காரியங்கள் நிகழ அதற்கேற்ற சூழ்நிலை அவசியம். அதற்காகத் தான் "உங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வாருங்கள்'' என்று, ஜனங்கள் கற்பிக்கப்பட்டுள்ளனர். அது முற்றிலும் உண்மை . சில நிமிடங்களுக்கு முன்பு என் மகள். ரெபேக்காள் இங்கு வந்து உட்கார்ந்ததை நான் கண்டபோது மகிழ்ச்சி கொண்டேன். ஒரு பெண்ணை நோக்கி நான் கண் சிமிட்டினதை உங்களில் சிலர் கண்டீர்கள். அது தான் என் மகள். அவள் இங்கு வந்து உட்கார்ந்தாள். அவள் ஆவியின் அபிஷேகத்தைப் பெறவேண்டுமென்று விரும்புகிறேன். அதற் காகவே அவள் இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறாள். அதன் நோக்கம் அதுவே. அதற்கு சூழ்நிலை அவசியம். 84. ''கோழி முட்டை ஒன்றை ஒரு நாய் குட்டியின் அடியில் வைத்து அடைகாக்க வைத்தாலும், அது குஞ்சு பொறிக்கும்'' என்று டாக்டர் பாஸ்வர்த் கூறுவது வழக்கம். அது ஒரு கோழி முட்டை. குஞ்சு பொறிக்க அதற்கேற்ற சூழ்நிலையுள்ளது: - 85. நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன். யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏற்ற சூழ்நிலை யில் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையை அது பொறிக் கும். தக்க சூழ் நிலை தான் அவ்வாறு செய்கிறது - எந்த ஒரு ஸ்தாபனத்தின் பெயரை உங்கள் மேல் ஓட்டுச் சீட்டாக '(Denominationaltag) நீங்கள் பெற்றிருந்தாலும். - . . . 86. நான் மாடு மேய்ப்பது வழக்கம். அவைகளை காட்டிற் குள் ஓட்டிச்சென்று புல் தரையில் புல்மேய வைப்பதுண்டு. மாடுகள் கதவு (gate) வழியாக கடக்கும்போது காட்டு அதிகாரி கவனித்துக் கொண்டேயிருப்பார். அவை எந்த ஜாதியென்று அவர் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் எல்லா ரகம் மாடு களும் அதன் வழியாக கடந்து செல்லும். ஆனால் ஒன்றை மாத் திரம் அவர் கூர்ந்து கவனிப்பார். அது தான் இரத்த ஓட்டுச் சீட்டு (Blood tag). அது 'ஹெரிபோர்ட்' வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். இல்லையேல் அது காட்டிற்குள் போக முடியாது. ஏனெனில் ஹெரிபோர்ட் சங்கத்தைச் சேர்ந்த மாடுகள் மாத்திரமே அந்த காட்டில் புல் மேய வேண்டும். அதற்கென அந்த இரத்த ஒட்டுச் சீட்டு அவசியம். அந்த ரகத்தைப் பாதுகாக்க இப்படி செய்கின்றனர். 87. நியாயத்தீர்ப்பின் போதும் அவ்வாறே இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் நான் மெதோடிஸ்டா, பாப்டிஸ்டா, பெந்தெகோஸ்தேயினனா, அல்லது பிரஸ்பிடேரியனா என்று என்னைக் கேட்கப் போவதில்லை. இரத்த ஓட்டுச் சீட்டு இருக்கிறதா என்று மாத்திரமே அவர் கவனிப்பார், "இரத் தத்தை நான் கண்டால், உங்களைக் கடந்து சென்று விடுவேன்.'' 88. எனவே இந்த தொட்டிகள்... அதிலுள்ள தண்ணீர் சிறிது காலம் தேங்கிக் கிடந்து அசைவற்றிருக்கும்போது, அது கெட்டு விடுகிறது. அது தவளைகளுக்கும், பல்லிகளுக்கும், பாம்புகளுக்கும், கிருமிகளுக்கும் உறைவிடமாகின்றது. அதன் அசைவற்ற தன்மை அதை அந்நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. மழை தண்ணீர் தானியக் களஞ்சியத்தின் கூரையை அல்லது அருகிலுள்ள கூரையைக் கழுவிக் கொண்டு தொட்டி யில் நிறையும்போது, எப்படிப்பட்ட அசுத்தமும் கிருமிகளும் அதிலிருக்குமென்று உங்களால் கற்பனை செய்ய முடிகிற தல்லவா? 89. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த ஒரு ஸ்தாபன முறைமைக்கும் அது பரிபூரண எடுத்துக் காட்டாயுள்ளது. அவன். தொடக்கத்திலேயே தோற்றவனாயிருக்கிறான். அதனால் தான் அவனுக்கு ஒரு இரட்சகர் அவசியம். அவன் தன்னைத் தான் இரட்சித்துக் கொள்ள முடியாது. அதைக் குறித்து அவனால் ஒன்றும் செய்ய இயலாது. தொடக்கத்திலேயே அவன் இழந்த நிலையிலிருக்கிறான். இவ்வுலகில் அவன் பாவமுள்ளவனா கப் பிறக்கிறான். அவன் பொய் பேசுபவனாக இவ்வுலகிற்கு வருகிறான். அவன் தொடக்கத்திலேயே பொய்யன். எனவே, தனக்குத்தானே இவ்வுலகில் அவன் என்ன செய்து கொள்ள முடியும்? 90. பரிசுத்தமுள்ள மனிதன் என்று யாருமே கிடையாது" பரிசுத்த சபை எதுவுமே கிடையாது. அது பரிசுத்த ஆவி! பரிசுத்த சபையல்ல, பரிசுத்த ஜனங்களல்ல, அது ஜனங்களின் மத்தியில் பரிசுத்த ஆவி இருப்பதே. அது தான் அது. ஆமென், பேதுருவும் மற்றவரும் நின்றது பரிசுத்த மலையல்ல. அந்த மலை பரிசுத்தமானதல்ல. ஆனால் பரிசுத்தமுள்ள தேவன் அந்த மலையின் மேல் நின்றது அதைப் பரிசுத்தமாக்கினது. பரிசுத்த நபர் என்பது கிடையாது. பரிசுத்த ஆவி அந்த நபரை உபயோகிப்பதால், அது தான் அவனைப் பரிசுத்தமடையச் செய்கிறது. அந்த மனிதனல்ல, பரிசுத்த ஆவி என்னும் நபர். மனிதனல்ல, அவன் ஓரு சாதாரண மனிதன். ''அவன் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுபவனாய் இவ் வுலகில் வருகிறான்.'' 91. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த ஸ்தாபன முறை மையும் அவனை அதற்குள் வைத்திருக்கும். அந்த புத்தி கூர்மை யுள்ள கண்கள் அவனுடைய கண்களைக் குருடாக்கிப் போடும். அவனும் “நான் இந்த ஸ்தாபன சபையைச் சேர்ந்தவன், என் பெயர் ஸ்தாபனப் புத்தகத்தில் எழுதப்பட்டு விட்டது. நான் இதை செய்தேன், என் தந்தை இதுவாக இருந்தார் என்றெல் லாம் எண்ணிக்கொள்கிறான். இதைக் கேட்கும் போது அது சரியென்று தோன்றுகின்றது. அதற்கு எதிராக நான் எதையும் கூற முனையவில்லை. ஆனால் நண்பனே, "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் அதை காணவும் முடியாது'' என்று இயேசு கூறியுள்ளார். 'காண்பது' என்றால் 'கண்களால் காண்பது' என்னும் அர்த்தமல்ல. "அவன் பரலோக ராஜ்யத் தைப் புரிந்துகொள்ள மாட்டான்' என்பதே அதன் அர்த்தம் - நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரை. 92. அன்று அங்கு நின்று கொண்டு, குற்றம் கண்டு பிடித்து ஏளனம் செய்த அந்த பாப்டிஸ்டு சுவிசேஷகர் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும்? அதை ஏற்றுக் கொள்ள அவருக்குள் ஒன்றுமில்லையே. தேவன் தான் அதை செய்ய முடியும், பாருங்கள். தேவன் அவருக்கு பரிசுத்த ஆவியை அருளினார். இது மாய்மாலம் அல்ல வென்றும், இது வார்த்தை யென்றும் அவர் வெளிப்படுத்தினார். ஆனால் அந்த சுவிசேஷகரோ வேதாகமக் கல்லூரியில் படித்து பெற்ற கருத்தை கொண்ட வராயிருந்தார். அவர்கள் தேவனுடைய ஆசிர்வாதங்களை கடந்த காலத்துடன் இணைக்க முற்படுகின்றனர். " 93. இன்று காலை இங்கு அமர்ந்துள்ள பாப்டிஸ்டு போதகர் - ஒருவர் அண்மையில் என்னிடம் வந்து, "சகோ, பிரான் ஹாமே, நீங்கள் புரியும் ஒரு செயல் தவறு'' என்றார். நான், "சொல்லுங்கள்'' என்றேன். 94. ''நீங்கள் மிகவும் உத்தமர், நல்லவர் என்றார் “நன்றி, ஐயா'' என்றேன். “ஆனால் நீங்கள் ஒரு காரியத்தை தவறாகக் செய்கின்றீர்கள்'' என்றார். "நான் செய்யும் ஒரு காரியத்தையாவது ஆண்டவர் தவறென்று கண்டுபிடிப்பார் என்று நினைக்கிறேன்'' என்றேன். 95. அவர், “அப்படி ஒரு காரியம் உள்ளது. நீங்கள் உலகிற்கு அப்போஸ்தலருடைய ஊழியத்தை அறிமுகப்படுத்த முயல் கின்றீர்கள். அப்போஸ்தலரின் ஊழியம் அப்போஸ்தலர்களுடன் முடிவு பெற்று விட்டது'' என்றார். 96 “நான் பாப்டிஸ்டு என்னும் ரீதியில் மற்றொரு பாப்டிஸ் டாகிய உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்க விரும்புகி றேன்'' என்றேன். ''என்ன கேள்வி?'' என்றார். 97. ''தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் தேவனு டைய ஆவியால் அருளப்பட்டது என்று விசுவாசிக்கிறீர்களா ? என்று கேட்டேன். “ஆம், நிச்சயமாக'' என்று விடையளித்தார். 98. “அதனுடன் எதையும் கூட்டவோ, அதிலிருந்து எதை யும் எடுத்துப்போடவோ கூடாதென்று அவர் கூறியுள்ளார். அப்போஸ்தல ஆசிர்வாதம் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம் எப்பொழுது ஜனங்களின் மேல் இறங்கினதென்று நான் காண்பிக்கிறேன். அது எந்த வாக்குத்தத்தத்தின் மூலம் எப் பொழுது ஜனங்களிடமிருந்து எடுபட்டதென்று நீங்கள் எனக் குக் காண்பியுங்கள். அதை உங்களால் காண்பிக்க முடியாமல் போனால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெ னில் அந்த ஆசிர்வாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது'' என்றேன். 99. சில நிமிடங்கள் அவர் ஒன்றுமே பேசவில்லை. அப் பொழுது நான், "சரி, சகோதரனே, இதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அப்போஸ்தல செய்தியை பேதுரு பெந்தெ கோஸ்தே நாளன்று கொண்டுவந்தான். அது சாத்தியமென்று நாமெல்லாரும் அறிவோம். இயேசு அவனுக்குக் கொடுத்த ராஜ்யத்தின் திறவுகோல்கள் அவனிடமிருந்தன. அவன் என்ன சொன்னான் என்று கவனியுங்கள்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கேன்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப் பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத் தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம் முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாருவக்கும் உண்டாயிருக்கிறது. இந்த வாக்குத்தத்தத்தை அவர் எடுத்துப் போட்டிருந்தால், பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு கூறின வார்த்தைகள் என்னவாயின?'' என்று கேட்டேன், பாருங்கள்? அது முடிவுபெறவேயில்லை. அருமையான மரிக்கும் ஆட்டுக்குட்டியே, உம் விலையேறப் பெற்ற இரத்தம் எக்காலத்தும் அதன் வல்லமையை இழந்து போவதில்லை கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட தேவனுடைய சபையிலுள்ள எல்லோரும் இனி பாவமே செய்யாதடி இரட்சிக்கப்படும் வரைக்கும் இந்த எளிய மழலை, திக்கு வாயுள்ள நாவு அமைதியாக கல்லறையில் படுத்துக் கொண்டிருக்கும் போது இரட்சிக்கத் தகுந்த உம் வல்லமையை உயர்ந்த', இனிய பாடலால் பாடித் துதிக்கும். , 100. அதை நான் விசுவாசித்து. அதில் நிலைத்திருக்க ' தேவன் தாமே உதவி புரிவாராக. எல்லோருமே அதில் நிலைத் தி ருக்க வேண்டும். ஏனெனில் அது சுவிசேஷத்தின் சத்தியமாயுள் ளது. ஆம், ஐயா!'. 101. புத்தி கூர்மையுள்ள மனிதன் இவைகளைக் காண முடியாது. ஏனெனில் அவை கிரியை செய்யாது. அவை ஒரு போதும் கிரியை செய்ததில்லை. ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட மார்க்கமும், ஸ்தாபன அனுபவமும் தேவனுடைய சமுகத்தில் ஒருபோதும் கிரியை செய்யாது. அது தேவனிட மிருந்து கலப்படமில்லாமல் வரவேண்டும். தேவன் முன்காலங் களில் ஸ்தாபனமுறைமைகளை உபயோகித்ததேயில்லை. ஸ்தா பனங்கள் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்பது உண்மை. ஆனால் நான் தேவனுடைய உண்மையான வித்தைக் குறிப்பிடுகிறேன். பெந்தெகொஸ்தே நாளன்று விழுந்த ஆசிர் வாதத்தைப் போன்ற ஆசிர்வாதம் ஸ்தாபனங்கள் மூலம் வருவ தில்லை. அது மறுபிறப்பின் மூலமே வருகின்றது. 102. நாம் இஸ்ரவேல் ஜனங்களை உதாரணமாக எடுத் துக் கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் உதாரண மாக இருந்து வந்துள்ளனர். கவனியுங்கள், அவர்கள் தங்க ளுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டு விட்டு, தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண் டார்கள். ஒரு மனிதன் ஆர்டீஷியன் ஊற்றிலிருந்து வரும் தண்ணீரைக் குடித்த பிறகு, தண்ணீரைக் குடிக்க தனக்கென ஒரு தொட்டியை வெட்டிக் கொள்வதை உங்களால் நினைத் துப் பார்க்க முடிகிறதா? தீர்க்கதரிசி அப்படித்தான் கூறுகி றான். தேவனுடைய வார்த்தை அவ்வாறு கூறுகிறது. தேவன் அவ்வாறு தீர்க்கதரிசியிடம் கூறினார். “என் ஜனங்கள் ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டு விட்டார்கள்; தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். 103. பாருங்கள், தங்கள் ஆதிக்கத்திலுள்ள ஒன்றை தாங்கள் என்ன சாதித்தனர் என்று காண்பிக்க அவர்கள் விரும்பினர். அது தான் ஸ்தாபன மார்க்கத்தின் மூடத்தன மாகும். அவர்கள் எப்பொழுதுமே பிரயாசப்படவேண்டும். அவர்களுக்கு அதனுடன் ஒரு தொடர்பு இருக்கவேண்டும். அவர்களுக்கு ஸ்தாபன முறைமைகள், சங்கங்கள் போன்றவை இருக்கவேண்டும். ''நான் இதை சார்ந்தவன்'' என்று அவர்கள் கூறவேண்டும். தேவனுடைய தாழ்மையான பிள்ளைகளாக இருப்பதற்கு பதிலாக, தங்களைப் பிரபலமாக காண்பித்துக் கொள்ள ஏதாவதொன்று அவர்களுக்கு அவசியமாயுள்ளது. தேவன் தமது வழியில் கிரியை நடத்த விட்டுக் கொடுப்ப தற்கு பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த வழிகளில் கிரியை செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு தான் இந்த ஸ்தாபன முறைமைகள் சபையைப் பீடித்துள்ளன. ஒரு ஸ்தாபனம் இந்த வழியை விரும்புகிறது, மற்றொரு ஸ்தாபனம் அந்த வழியை விரும்புகிறது. நீங்கள் மெதோடிஸ்டுகளாக் இருந்தால் இப்படி இருக்கவேண்டும், பாப்டிஸ்டுகளாக இருந்தால் அப்படி இருக்கவேண்டும். பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர் போன்ற இன்னும் மற்றவர்க்கு தங்கள் சொந்த முறைமைகள் உள்ளன. அதற்கு விரோதமாக நான் பேசவில்லை. நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது அதுவல்ல. 104. மனிதன் தன் சொந்த வழியைக் கடைபிடிக்க விரும்புகிறான். தேவன் தமது சொந்த வழியில் கிரியை செய்ய விரும்புகிறார். அவர், ''நீ உன் சொந்த வழியில் நிலைத்திருக் கின்றாய் - வெடிப்புள்ள தொட்டி. ஜீவனுக்குப் போகும் வழியாகிய என் வழியை ஏற்க மறுக்கின்றாய்'' என்கிறார். 105. இன்றும் அவ்வாறே உள்ளது. அதிலிருந்து சிறி தேனும் மாறுதல் இல்லை. சுத்தமான தண்ணீர் கொப்பளித் துக் கொண்டு மேலே வரும் ஆர்டீஷியன் ஊற்றை ஒருவன் விட்டு விட்டு, தான் வெட்டின வெடிப்புள்ள தொட்டிக்குச் செல்லும் மூடத்தனத்தை சற்று சிந்தித்து பாருங்கள். அவன் தனக்கென ஒரு தொட்டியை வெட்டிக் கொண்டு, தானியக் களஞ்சியத்தின் கூரையிலுள்ள குப்பையைக் கழுவிக் கொண்டு தொட்டியில் நிறையும் தண்ணீரைக் குடிக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட ஒருவனுக்கு நிச்சயமாக மூளைக் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும். 106. ஒரு மனிதன், வேதத்தை உறுதிப்படுத்தி அதை தத்ரூபமாக்கும் பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக, வேதத்தைக் குறித்த ஸ் தாபன கருத்துக்களுடன் இணைந்திருப்பா னென்றால், அவனிடம் ஆவிக்குரிய கோளாறு ஏதோ உண்டு. அது முற்றிலும் உண்மை . நிச்சயமாக, பரிசுத்த ஆவி! ஒவ்வொருவரும் வேதத்தை வித்தியாசமாக வியாக்கியானம் செய்து தாங்கள் கொண்டுள்ள கருத்துக்களே சரியென கருதுகின்றனர். தேவனுக்கு உங்கள் உதவி தேவை யில்லை. தேவனுக்கு உங்கள் வியாக்கியானம் அவசியமில்லை. 107. தேவனே தமது சொந்த வியாக்கியானி. தேவன், தாம் கூறியுள்ளபடியே, வேதத்தை தமது வழியில் வியாக்கியானம் செய்கிறார். ''வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கர்த்தர் ஆதியிலே , கட்டளையிட்டார். அப்பொழுது வெளிச்சம் தோன்றிற்று. அதற்கு வியாக்கியானம் தேவையேயில்லை. அதை தேவன் நிறைவேற்றினார். அவர், ''ஒரு கன்னிகை : கர்ப்பவதி யாவாள்' என்றார். அவர் கூறியவாறே ஒரு கன்னிகை கர்ப்பவதியானாள். அதற்கு வியாக்கியானம் அவசியமில்லை. மாம்சமான யாவர் மேலும் அவர் தம் ஆவியை ஊற்றுவதாக வாக்களித்தார். அதை அவர் நிறைவேற்றினார். அதற்கு வியாக்கியானம் ஏதும் அவசியமில்லை. தேவன் தமது வார்த் தையை உறுதிப்படுத்தி, வெளிப்படுத்தி, அதை நிருபிப்பதன் மூலமே அதை வியாக்கியானம் செய்கிறார். 108. ஒரு தீர்க்கதரிசி, தான் தேவனால் அனுப்பப்பட்ட வன் என்று அவ்வாறே நிருபிக்கப்பட்டான். கர்த்தர், 'உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்த ராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். அவன் சொன்னது நிறைவேறினால் அவனுக்குப் பயப்படுங்கள். அது நிறை வேறாமல் போனால் அவனுக்கு பயப்படவேண்டாம்'' என்றார் (எண்.12:6; உபா.18:22). 109. தேவன் தமது வார்த்தையை உரைத்து, அந்த தீர்க்கதரிசியும், ''இதுதான் தேவனுடைய வார்த்தை '' என்று சொல்லி அது நிறைவேறினால், அது தேவன் செய்வ தாகும். 110. ஆனால் அவன், ''இதுவே கடைபிடிக்க வேண்டிய முறை. அந்த நாட்கள் கடந்து விட்டன' என்று கூறுவானா னால்... அவன் கையில் அப்பத்தை வைத்துக் கொண்டு, பசியுள்ள பிள்ளைகளுக்கு முன்னால் நீட்டி, அவர்கள் அதை வாங்க கை நீட்டும்போது, அதை அவர்களிடமிருந்து இழுத்துக் கொண்டு அவர்களைப் பட்டினி போடுவதற்கு சமானம். ஆர்டீஷியன் ஊற்று உள்ளபோது, நீங்கள் ஏன் தொட்டியின் தண்ணீரைக் குடிக்க வேண்டும்? 111. ஜீவத் தண்ணீர் ஊற்று என்றால் என்ன? அதை ஆர்ஷிடீயன் ஊற்றுடன் நாம் ஒப்பிடலாம். 112. தொட்டிக்கும் ஜீவத்தணீர் ஊற்றுக்குமுள்ள வித்தியா சத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகி றேன்- அர்டீஷியன் ஊற்றுக்கும், கிருமிகள், பல்லிகள், தவளை கள் நிறைந்த பழைய வெடிப்புள்ள தொட்டிக்குமுள்ள வித்தி யாசம். 113, ஆர்டீஷியன் ஊற்றை சற்று கவனியுங்கள். அது தன்னில் தானே போதுமானதாய் உள்ள (Self-supporting). அதற்கு பெரிய ஸ்தாபனங்கள் பணமளிக்க வேண்டும் என்ற அவசியம் சிடையாது. அதிக அங்கத்தினர்களை அதில் சேர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதன் அங்கத்தினர்கலை அதுவே ஆதரிக்கிறது, அவர்களுக்குள் ஜீவனுள்ள ஆவி கிரியை செய்வதன் மூலம். 114 அதிலிருந்து புறப்பட்டு வரும் தண்ணீரை கவனியுங் கள், அது புதிதாகவும், சுத்தமாகவும், தெளிவாகவும் உள்ளது, ஆனால் தொட்டியிலுள்ள தண்ணீர் அப்படியல்ல. அது தேங்கிக் கிடந்து, நாற்பது ஐம்பது வெவ்வேறு கருத்துக்களால் நிறைந் துள்ளது, "இது தான் சரி, அது தான் சரி, இந்த கருத்து சரி' என்று அவர்கள் கூறி, வோட்டு போட்டு அவர்களைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்பு ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத் திக் கொள்கின்றனர். ஆனால் சுத்தமான, தெளிவான, கலப்பட மற்ற தேவனுடைய வார்த்தையோ தேவனுடைய கரத்திலி ருந்து புறப்பட்டு வருகிறது. அது உண்மையான ஆர்டீஷியன் ஊற்று. 115. கவனியுங்கள், அதன் வல்லமையின் இரசிகயம் அத குள் அடங்கியுள்ளது. மனிதர்கள் அதை காணமுடிவதில்லை. நிலத்தின் அடியிலுள்ள ஏதோ ஒருவகை அழுத்தம் (Pressure) அதை மேலே தள்ளி, பூமிக்குக் கொண்டு வருகிறது. 116. இந்தியானாவில் நான் வேட்டை அதிகாரியாக இருந்தபோது, ஹாரிசன் மாகாணத்திற்கு செல்வது வழக்கம். அங்கு ஒரு ஊற்று உள்ளது. அது கொப்பளித்துக் கொண்டே மேலே வரும். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. பனி பூமி யில் பெய்திருந்தாலும், பனிக்கட்டி உறைந்திருந்தாலும், எவ் வளவு குளிராக இருந்த போதிலும், அது கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஆனால் மனிதனால் உண்டாக்கப்பட்ட, தவளை கள் கொண்ட குளங்களும் மற்றெல்லாமே உறைந்து விட்டன. 117. அது எதை காண்பிக்கிறதென்றால், எந்த ஒரு ஸ்தா பனமும், அதன் ஆவி சற்று குறைந்து போனால், அல்லது "சூழ் நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டால், உறைந்து போய்விடும். ஆனால் தேவனுடைய ஆர்டீஷியன் ஊற்றோ - அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அது எப்பொழுதுமே கொப்பளித்துக் கொண்டு வெளியே தள்ளப்படுகின்றது. முதலில் அங்கு ஒன்றுமே இல்லாதது போல் தோன்றுகிறது. அது கொப்பளிக்கத் தொடங்கும் மாத்திரத்தில், வெளியே தள்ளப் படுகின்ற து, 118. ஒரு நாள் நான் ஹாரிசன் மாகாணத்திலுள்ள அந்த ஊற்றண்டை உட்கார்ந்து கொண்டு, அது கொப்பளித்துக் கொண்டு வெளியே வருவதை கவனித்துக் கொண்டேயிருந் தேன். "அந்த ஊற்றுடன் நான் சிறிது நேரம் பேசப்போகின் றேன்'' என்று மனதில் நினைத்துக் கொண்டு, என் தொப்பியைக் கழற்றிவிட்டு, "நீ எதைக் குறித்து இவ்வளவு மகிழ்ச்சி கொண்டி ருக்கிறாய்? நீ எதற்காக கொப்பளித்துக் கொண்டிருக்கிறாய்? ஒருக்கால் மான்கள் எப்பொழுதாகிலும் உன் தண்ணீரைப் பருகுவதனாலா? என்று கேட்டேன், அதற்கு பேச முடிந்தால், அது "இல்லை'' என்று பதிலளித் திருக்கும். ''நான் உன் தண்ணீ ரைப் பருவதனாலா?'' "அதுவல்ல காரணம்'' 119. "உன்னை சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்திருப்பது எது? உன்னை கொப்பளிக்கச் செய்வது எது? நீ எப்பொழுதுமே மகிழ்ச்சி பொங்கி காணப்படுகின்றாயே! எதுவுமே உன்னை உறை யச் செய்ய முடியவில்லையே, நீ பீச்சிக் கொண்டு வெளிவருகின் றாய். தெளிவான தண்ணீரேயன்றி வேறொன்றும் உன்னிட மில்லையே'' என்றேன். 120. அதற்கு மாத்திரம் பேசமுடிந்திருந்தால் அது என்ன சொல்லியிருக்கும் தெரியுமா? "சகோ. பிரான்ஹாமே, நானாகவே கொப்பளிக்கவில்லை. எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று என்னை இப்படி கொப்பளிக்கச் செய்கிறது. அதைவிளக்க இந்த வாக் கியம் போதாது. ஆயினும் நான் என்ன கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். 121. மறுபடியும் பிறந்த அனுபவமும் அது . போன்றே உள்ளது. அதை உங்களால் அடக்கி வைக்கமுடியாது. உங்களுக் குள் இருக்கும் ஜீவ ஊற்று கொப்பளித்துக் கொண்டு மேலே வந்து, நித்திய ஜீவனை அடைகிறது, அதில் ஏதோ ஒரு இரகசியம் உள்ளது. உங்கள் முயற்சியினால் அது நிகழ்வதல்ல. மனிதனால் வெட்டப்பட்ட தொட்டிகள் உறைந்து போய் விடும், அவர்கள் எழுப்புதலுக்காக கெஞ்ச வேண்டும். ஆனால் ஊற்றின் கீழுள்ள மனிதனுக்கு-ஊற்றில் வாழும் மனிதனுக்கு- அது இரவும் பக லும்! நீங்கள் உள்ளூர் மழைக்கு - உள்ளூர் எழுப்புதலுக்குகாத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அதனால் நிறைந் திருக்கிறீர்கள். ''ஜீவ ஊற்றை அவனுக்குக் கொடுப்பேன், அது கொப்பளித்துக் கொண்டு மேலே வரும். அதில் ஏதோ ஒன்றுண்டு, ஒவ்வொரு நாளும் அது புதிதாகவும், சுத்தமாகவும், தெளிவாகவும் உள்ளது. அது உங்கள் இருதயத்திலுள்ள கலப்பட மற்ற தேவனுடைய வார்த்தை . அது தன்னை உறுதிபடுத்தி, தனக்காகவே பேசுகின்றது. மழை பெய்கின்றதோ, பனி பெய் கின்றதோ, வான் நிலை எப்படியிருக்கின்றதோ என்னும் கவலையே வில்லை. நீங்கள் எந்த நிலையிலும் சந்தோஷமாயிருக்கின்றீர்கள். ஏனெனில் பரிசுத்த ஆவி உள்ளிலிருந்து கொண்டு, கொப்பளித்து மேலே வருகிறது. அது மறைந்திருக்கும் வல்லமை. கவனியுங் கள், அதன் இரகசியம் உள்ளே அடங்கியுள்ளது. 122. அதன் தண்ணீ ரைப் பருகவும் உபயோகிக்கவும் விரும்புகிறவர்களுக்கு அது தானாகவே இலவசமாகத் தருகிறது. நீங்கள் ஏதாவது ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, -''எழுப்புதலுக்காக நான் மெதோடி ஸ் நி சபைக்கு ச் செல்ல வேண்டும், ஏனெனில் நான் மெதோடிஸ்டு. நான் பெந்தெ கொஸ்தேயினரிடம் செல்ல வேண்டும், ஏனெனில் நான் பெந்தகொஸ்தே எழுப்புதலைச் சேர்ந்தவன்'' என்று சொல்ல வேண்டியதில்லை, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்த ஊற்று சுரந்து மேலே வந்து, அந்த தண்ணீரை நீங்கள் பருகி யிருந்தால், உங்களிடம் எவ்வித வித்தியாச பேதமும் காணப் படாது. வருகிற அனைவருக்கும் நீங்கள் தருவீர்கள். அது கத் தோலிக்கரானாலும், பிராடெஸ்டெண்டானாலும், யூதனானாலும், நாத்திகனானாலும், நீங்கள் எவ்வித வேறுபாடுமின்றி ஜீவனின் தம்பிக்கையை அவர்களுக்களிப்பீர்கள், உங்களுக்குள் ஏதோ ஒன்று நிச்சயமாக உள்ளது. அது தான் அவ்விதம் செய்கின்றது. 123. அந்த ஊற்றைக் குறித்து. வேறொன்றைக் கவனித்தீர் களா? நீங்கள் 'பம்ப்' (pump) அடித்து தண்ணீரை மேலே கொண்டு வரவேண்டாம், அல்லது வாளியில் தண்ணீர் இறைக்க வேண்டாம், இவ்விதம் 'பம்ப்' அடிப்பதைக் கண்டு எனக்கு இளைப்பு தோன்றுகிறது. அவர்கள் இசையை இசைத்து, மேலும் கீழும் குதிக்கின்றனர். அவர்கள் கைப்பிரதிகளை பட்டினங்களில் விநியோகித்து, "இந்த மணி நேரத்துக்குரிய மனிதர்" என்னும் பெரிய விளம்பரங்களைத் தொங்க விடுகின்றனர். 124, இந்த மணி நேரத்துக்குரிய மனிதர் ஒருவர் மாத்தி ரமே. அவர் தாம் இயேசு கிறிஸ்து. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவனிடத்திலிருந்து வந்த தூதுவர் (Messenger) ஒருவர் மாத்திரமே. அது இயேசு கிறிஸ்து. ஆம், ஐயா. 125. இதை நீங்கள் மேலே 'பம்ப்' செய்யவோ, அல்லது கைப்பிடியை கீழே தள்ளவோ அவசியமில்லை. அதை நீங்கள் ஒன்றாக இணைக்க வேண்டிய அவசியமில்லை. அதை நீங்கள் இலவசமாக எடுத்துக் கொள்கிறர்கள். ஆமென். "நானே ஜீவத்தண்ணீர் ஊற்று. என்னை நீங்கள் விட்டுவிட்டு, உங்களுக் குத் தொட்டியை வெட்டிக் கொண்டீர்கள்''. நீங்கள் அதை 'பம்ப்' செய்ய வேண்டிய அவசியமில்லை. அதை ஒன்றாக இணைக் கவோ அல் லது தோண்டவோ அவசியமில்லை. அதிலிருந்து நீங்கள் தண்ணீரை எவ்வித முயற்சியுமின்றி எடுத்துக் கொள் கிறீர்கள். 126. வடிகட்ட உங்களுக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வேதசாஸ்திரம் அவசியமில்லை- அதன் வழியாக எது கடந்து சென்றது என்றோ அல்லது அது என் ன செய்ததென்று அறிவிக் கவோகல்விமுறைமையை ஆதாரமாகக் கொண்டு மனிதனால் ஏற் படுத்தப்பட்ட ஏதோ ஒரு வேதசாஸ்திரம், இதில் சுய நீகியுள்ள மார்க்கம், அதில் சுய நீதியுள்ள மார்க்கம். இப்படியாக மார்க்க முறைமைகள் அடங்கிய தொட்டிகள்- அப்படிப்பட்ட ஒன்று உங்களுக்கு அவசியமில்லை. அது இருக்கவேண்டிய அவசியமே யில்லை, வடிகட்டும் கவிதை ஒன்றை ஆர்டிஷியன் ஊற்றின் மேல் போட்டுப் பாருங்கள். அதை மேலே து: க் கி எறிந்துவிடும். அதற்கும் கந்தைக்கும் எவ்வித தொடர்புமில்லை அது தன்னில் தானே போதுமானதாயுள்ளது. அது தேவனுடைய வல்லமை, ஜீவன் பெற்று உற்றாக வெளிவருகிறதாயுள்ளது. அப்படிப்பட்ட ஒன்றை ஒருவன் விட்டு விட்டு, ஒரு ஸ்தாபனத்தை சேர்வா னேன் என்று என் னால் வி வ ரிக்க முடிய வில்லை. அதற்கு வடிகட் டும் கந்தைகள் அவசியமில்லை அது நிறைவதற்கென உள்ளூர் மழையை சார்ந்தி நக்க தேவையில்லை. அது எக்காலத்தும் நிறைந் துள்ளது. ஆமென். 127. "இன்று நான் சோர்வுற்றிருக்கிறேன்'' என்று மனிதர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் . ஓ, என்னே! 128. ஓ, காரியங்கள் எனக்கு அனுகூலமாயிருந்தாலும் இல்லாமற் போனாலும் நான் தேவனுடைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியுறுகிறேன். அவரே என் ஜீவன். ஆமென். அவர் நமது ஜீவன். அவரே ஜீவன், சம்பூரணமான ஜீவன். ஆம், ஐயா. அது நமக்கு என்ன செய்கிற தென்று பாருங்கள். அதன் வல்லமையும் தூய்மையும் அதற் குள்ளே உள்ளது, தொட்டி அல்லது ஸ்தாபன முறைமைகளைப் போன்று இதை 'பம்ப்' அடிக்க வேண்டிய அவசியமில்லை. 129. சிலர், "உங்கள் ஐக்கியச் சீட்டு எங்கே? நீர் நல்ல பாப்டிஸ்டா அல்லது பெர் தெகொஸ்தேயினரா என்று அறிந்து கொள்ளட்டும். நீர் ஒருத்துவக்காரரா, இருத்துவக்காரரா, திரித்துவக்காரரா, என்று அறிந்து கொள்ள உங்களிடம் சீட்டுள்ளதா என்று பார்க்கட்டும்" என்கின்றனர். அதற்கு 'பம்ப்' அடிக்க வேண்டிய அவசியமில்லை. அது எப்பொழுதுமே தண்ணீரை அளித்துக் கொண்டிருக்கிறது. 130. என்னிடம் ஒரு தொட்டி இருந்தது. தண்ணீரைப் பெற அந்த பழைய 'பம்ப்' பில் நான் தண்ணீர் ஊற்றி, அதிக நேரம் 'பம்ப்' அடிக்க வேண்டும். மறுபடியும் தண்ணீரை ஊற்றி 'பம்ப்' அடித்துக் கொண்டிருக்க வேண்டும். 'பம்ப்' அடித்து கிருமிகளை வெளியே கொண்டு வர, கிருமிகளை உள்ளே ஊற்ற வேண்டிய நிலைமை, இந்த ஸ்தாபனங்களில் காணப் படும் சில எழுப்புதல்களும் அவ்வாறே உள்ளன. 131. ஆனால் தேவனுக்கு நன்றி. "இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டு. பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கின்றனர்.'' நீங்கள் அவர்களை சபை அங்கத்தினர்களாக ஆக்குவதில்லை. அவர்கள் அந்த ஊற்றண்டை வரும்போது, அவர்களை கிறிஸ்தவர்களாக்குகின்றீர்கள். 132. ஜீவத் தண்ணீருள்ள ஊற்றை நீங்கள் விட்டு விட்டு சாக்கடை குழி தண்ணீரைக் குடிப்பானேன்? 133. அதற்கு 'பம்ப்' அடிக்கத் தேவையில்லை. அதன் சக்தி அதற்குள்ளே உள்ள து. அதில் தண்ணீர் ஊற்றி அடிக்க வேண்டாம். ஆம், ஐயா. . னெனில் அதன் சொந்த ஜீவன் அதற்குள்ளே இருக்கின்றது. அப்படித்தான் தேவனுடைய ஜீவன் தனிப்பட்ட நபருக்குள் இருக்கிறது. சபையில் அல்ல, அது உனக்குள் இருக்கிறது. ஜீவனின் வித்தை உனக்குள் கொண்டிருப்பது நீயே. 134. அதை ஒருமுறை ருசி பார்த்தால், அது எல்லா குருமார்களையும் உறுதியாக நம்பச் செய்து விடும். கத்தோலிக்க குருவானவரைக் கேட்டுப் பாருங்கள், அல்லது பாப்டிஸ்டு குருவானவரைக் கேட்டுப் பாருங்கள். அது யாராயிருப்பினும், அந்த அருமையான, புதிதான ஆர்டீஷியன் தண்ணீரை ஒரு முறை ருசிபார்ப்பார்களானால், அது உண்மையென்று அவர் களை நம்பச் செய்து விடும். பசியுள்ள உன் ஆத்துமா -தாகமா யுள்ள உனக்கு- அது உறுதியான நம்பிக்கையாக இருக்கும். நீ தாகமாயில்லையென்றால்... இந்த பாப்டிஸ்டு தொடக்கத்தில் தாகமாயில்லை. ஆனால் அவர் தாகமடைந்த போது, அந்த தண்ணீர் அவருக்கு மிகவும் ருசியாயிருந்தது. அது உண்மை ! ஆனால் நீங்கள் முதலில் தாகமடைய வேண்டும். இயேசு அதை "பாக்கியவான்களின் தாகம்'' என்றழைத்தார். ''நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர் கள் திருப்தியடைவார்கள்'' (மத்.5;6). நண்பனே, இயேசு அவ்வாறு கூறினார். ஆம், ஐயா. தாகமுள்ளவர்களுக்கு அது பாக்கியமுள்ள ஊற்று. 135. நீங்கள் ஏன் அதற்கு பதிலாக சேற்றுத் தண்ணீ ரைப் பெறவேண்டும்? ஆர்டீஷியன் ஊற்றுக்குப் பதிலாக, கிருமிகளும் அழுக்கும், மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லா வித கருத்துக்களும் கொண்ட சேற்றுத் தண்ணீரைப் பருக நீங்கள் பிரியப்படுவீர்களா? யாராகிலும் அவருடைய வார்த்தையுடன் ஒன்றைக் கூட்டினால், அல்லது அதிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால், அவனுடைய பங்கு ஜீவ புள் சக்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்று தேவன் கூறியிருக்கிறாரே! 136. இந்த வார்த்தையை ஒவ்வொரு சந்ததிக்கும் உறுதிப் யடுத்துவதாக தேவன் வாக்களித்துள்ளார். "வாக்குத்தத்த மானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக் கும் உண்டாயிருக்கிறது. "(அப்.2:39). அப்படியிருக்க, நீங்கள் ஏன் ஸ்தாபன 'பம்ப்' பைக் கொண்டு, அநேக ஆண்டுகளாக புழுத்துப் போயிருக்கும் மன்னாவைப் 'பம்ப்' செய்ய வேண்டும்? அந்த மன்னா மார்டின் லூத்தர் காலத்தில் கெடாமலிருந்தது. அவ்வாறே மற்ற சீர்திருத்தக்காரர்களின் காலத்திலும் அது நன்றாயிருந்தது. அதைக் குறித்து ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் அது அநேக ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த மன்னா. " 137. நீங்கள் வேதத்தைப் படித்தால், அவர்கள் ஒவ்வொரு நாளும் அந்த மன்னாவைப் பொறுக்க வேண்டும். அதை புதிதாக ஒவ்வொரு நாளும் சேகரிக்க வேண்டும். அது சற்று பழையதாகி விட்டால் புழுத்து விடுகிறது. அப்படி புழுக்க, அதில் கிருமியோ அல்லது வேறெதோ இருக்க வேண்டுமென்று நாமறிவோம். 138. இந்த ஸ்தாபன முறைமைகளும் அவ்வாறே உள்ளன. ஒரு பெரிய எழுப்புதலுக்கும் மற்றொரு பெரிய எழுப்புதலுக்கும் இடையில் அது கெட்டுப் போய்க் கிருமிகள் நிறைந்துள்ளதுதொட்டியில் நெளியும் வால் கிருமிகள் (wiggle-tails) உள்ளது போல. அவை நெளிந்து செல்கின்றன. 139. இன்றைக்கு அநேகருடைய அனுபவம் அது போன்றே உள்ளது. அவர்கள் நெளியும் வால் கிருமிகள் நிறைந்தவர் களாயுள்ளனர். இவை ஒன்றிருந்து மற்றொன்றுக்கு நெளிந்து சென்று, உண்மையேயில்லாத கட்டுக் கதைகளைக் கூறி வருகின்றன. அது உண்மை- ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நெளிந்து செல்லுதல், "நான் மெதோடிஸ்டு சபையில் இருந் தேன், இப்பொழுது பாப்டிஸ்டு சபையை சேர்ந்து கொண்டேன்.. நான் கத்தோலிக்கனாக இருந்தேன்; இப்பொழுது இதை சேர்ந்து விட்டேன்.” அவை நெளியும் வால் கிருமிகள். ஓ, அதையெல்லாம் மறந்து விடுங்கள். 140. ஆர்டீஷியன் ஊற்றண்டை வாருங்கள். ஆமென்-என் றென்றும் ஜீவிக்கும் கிறிஸ்துவின் சமூகத்திற்கு, அவர் என்றென் றும் வற்றாத ஜீவ ஊற்று என்று நம்புகிறேன். அவரிடம் எவ்வளவு அதிகமாகப் பெறுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அது புதிதாகவும், குளிர்ந்ததாகவும், நல்லதாகவும், இனிதாகவும், ருசியுள்ள தாயும் ஆகின்றது. அவரை நான் முப்பத்து மூன்று ஆண்டு காலமாக சேவித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும், அது முந்தின நாளை விட இனிதாகிக் கொண்டு வருகிறது. இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது என்று அவர் கூறியுள்ளார். (யோவான் 4:14). அது எவ்வளவு, மகத்தானதென்று பாருங்கள். 141. இன்று அநேகர் செய்வதுபோல், இஸ்ரவேல் ஜனங்கள் செய்தனர். அவர்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றை விட்டு விட்டு, தொட்டிகளை தங்களுக்குத் தோண்டிக் கொண் டனர். 142. இப்பொழுது தேவனுடைய கிருபையைக் குறித்து சற்று பேசுவோம். நாம் சட்டதிட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு "அந்த நிர்ணயத்திற்கு நீ வர முடியாமற் போனால் .....என்னிடம் மார்க்க சம்பந்தமான அளவு கோல் உள்ளது. அந்த அளவிற்கு நீ வரவேண்டும். இல்லையென்றால் நீ உள்ளே வரமுடியாது” என்கிறோம். ஆனால் தேவனோ நம்மை கிருபை யினால் இரட்சிக்கிறார்- அளவுகோலை உபயோகித்தல்ல. பாருங்கள்? தேவன் தமது மிகுந்த கிருபையினிமித்தம், அவரிட முள்ள தண்ணீரை நாம் பானம் பண்ணும்படி செய்கிறார். இந்த அளவுகோலிலிருந்து... 143. முறுமுறுத்த இஸ்ரவேல் ஜனங்கள். கவனியுங்கள், அவர், “நான் உங்களை மறுபடியும் சந்திப்பேன்” என்றார். அதை நாம் வேதத்தில் காணலாம். கவனியுங்கள், அவர் அவர்களை சோதித்து, அதன் பின்பு சந்திக்கிறார், சிவந்த சமுத்திரத்தண்டையில் இஸ்ரவேல் ஜனங்கள் முறுமுறுத்தனர் அசைவற்ற எகிப்தின் தண்ணீரின் வழியாக அவரைப் பின் தொடர்ந்து, சுயாதீனமுள்ள ஜனங்களாக ஆவதற்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் உப்புக் கடலை - இல்லை, சிவந்த சமுத்திரத்தை-கடர் து வனாந்தரத்துக்குள் பிரவேசித்தனர் . அவர்களுக்கும், அவர்களைப் பாவனை செய்த விருத்தசேதன மில்லாதவர்களுக்கு ம் இடையே ஒரு பிரிவினை உண்டாக்கப் பட்டது. 144. அப்படி பாவனை செய்தது தொல்லை விளைவித்தது. பார்வோனும் அவனுடைய சேனை அனைத்தும் அங்கு அழிந்து போயினர். மானிடர் (இஸ்ரவேல் ஜனங்கள் - தமிழாக்கி யோன்) இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையின் மூலம் சிவந்த சமுத்திரத்தின் வழியாக நடந்து செல்வதை அவர்கள் கண்டு, அதை பாவனை செய்ய முயன்றனர். (ஒலிநாடாவில் காலி இடம்-ஆசி).... சமுத்திரம். அவர்கள் அவ்வாறு செய்ய முயன்றபோது அழிந்து போயினர். அது மாமிசப்பிரகாரமான ஒப்பிடுதல் (Carnal Comparison). 145. அவ்வாறு பாவனை செய்ய முயலும் மனிதன் உண்மையான கிறிஸ்தவனுடன் மாமிசப்பிரகாரமான ஒப்பிடுதலை ஏற்படுத்க் திகொள்ள முயல்கிறான். 146. நமது இந்திய சகோதரர்கள் அதை அறிந்துள்ளனர் நீங்கள் பம்பாய்க்கு விஜயம் செய்தால், அங்குள்ள இந்துக்கள் கூர்மையான ஆணிகளின் மேல் படுப்பதையும், நொறுங்கின கண்ணாடித் துண்டுகளின் மேல் நடப்பதையும், தீயில் நடப்பதை யும் நீங்கள் காணலாம். அவர்களால் என்ன செய்ய முடியு மென்பதை அவர்கள் காண்பிக்கின்றனர். காட்டிலுள்ள ஒரு மனிதன் தன் தெய்வத்துக்காக செய்யும் தியாகத்தைக் காண் பிக்கும் மாமிசப்பிரகாரமான ஒப்பிடுதலாக அது அமைந் துள்ளது. 147. எல்லா மார்க்கங்களி லு ம் இந் த கைய மாமிசப் பிரகாரமான ஒப்பிடுதலை நாம் காணலாம் -ஓ நவர் மற்றவரைப் போல் பாவனை செய்தல்; ஆனால் நமக்கு உதாரணமாக ஒருவர் மாத்திரமே உள்ளார். அவர் தாம் இயேசு கிறிஸ்து. அவரைப் போல் நாம் இருக்க முயலவேண்டும். அவர் வார்த்தையாயிருக் கிறார். அந்த தேவனுடைய வார்த்தை நமக்குள் வரும் போது, அவரைப் போலவே நாம் இருப்போம். 148. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எப்படியாயினும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு சென்றார். அவர்களுடைய வனாந்தரப் பிரயாணத்தில் அவர்கள் பிரிக்கப்பட்ட பின்பு -- எல்லா குளங்களும் உலர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர். 149. சகோதரனே, நீயும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் பிரயாணம் செய்யும் போது அதை தான் காண்பாய். உனக்கு எல்லா கதவுகளும் அடைபடுவதை நீ காண்பாய். அந்த ஆங்கிலிகன் போதகர் சொன்னது போன்று; முதலாவதாக அவருடைய சபை அவரை புறம்பாக்கினது. அநேகர் அவருடைய ஊழியத்தில் பரிசுத்த ஆவி பெற்றபோது, அதன் விளைவு அது தான். 150. இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு பிரயாணம் செய்த போது, அதை தான் கண்ட னர்-அவர்கள் நமக்கு திருஷ்டாந்தமாய் உள்ளனர். எல்லா, குளங்களும் உலர்ந்து போயிருந்ததை அவர்கள் கண்டனர். ஆம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தைக்குக் கீழ்ப் படிந்து அவர்கள் பிரயாணத்தை மேற்கொண்டபோது குளங்கள் உலர்ந்து போயிருந்ததை அவர்கள் கண்டனர். அவர்களுடைய பிரயாணத்தில், அவர்கள் குளங்கள் மேல் சார் திருக்க முடியாது என்பதை உணர்ந்தனர். 151. நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தது பிரயாணம் செய்யப் புறப்பட்டு, இதை சேர, அதை சேர முயன்றால் அதை ஆதரிக்க உலகத்தில் ஒரு தொட்டி கூட இல்லையென்பதை கண்டுகொள்ள நேரிடும்-இல்லவே இல்லை. நீ தனிப்பட்ட நபர். தேவன் தமது விருப்பப்படியே உன்னை வழிநடத்துகின்றார். இன்றைக்கும் நாம் அதை தான் காண்கி றோம்-எல்லா தொட்டிகளும் உலர்ந்துள்ளன. 152. ஆனால் தேவனுடைய வா க் கு த் த த் த மோ என்றென்றைக்கும் உண்மையாயுள்ளது. தேவன் தமது வாக்குத்தத்தத்தை தமது ஜனங்களில் நிறைவேற்றுவார். அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவாக்கு வதாக வாக்களித்திருந்தார். அவர் அதை நிறைவேற்றினார், சற்று யோசித்து பாருங்கள், காலியான, உலர்ந்த குளங்களின் மத்தியில், வனாந்தரத்தில் பிரயாணம் செய்த அந்த முறுமுறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்காக, அவர் தமது ஊழியக்காரன் - தலைவனான மோசே தீர்க்ம தரிசியை ஒருபுறம் அழைத்து, அவன் கன்மலையை அடிக்கும்படி செய்து, அவரை நம்பின் பிள்ளைகள் அழிந்து போகாதிருக்க, ஜீவத்தண்ணீர் ஊற்றை திறந்து கொடுத்தார். 153. இந்த நாளில் அது எனக்கு கிருபையை எடுத்துரைக் கிறது. நாம் தகுதியற்றவர்கள். நாம் எவ்விதம் பணிபுரிந்தோம், எவ்விதம் வாழ்ந்து வந்தோம் என்று பார்க்கும்போது, நாம் தகுதியற்றவர்களே, 154. ஆனால் தேவனோ இந்நாளில், உதாரணமாக இக் காலையில் இங்கு கூடி வந்துள்ள மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர் அனைவருக்கும் ஊற்றை திறந்து கொடுத்திருக்கிறார். எபிரேயர் 13 அதை நிருபிக் கின்றது-அதாவது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவ் ராயிருக்கிறார் என்பதை. எனவே அது யோவான் 3:16 ஐ 'உறுதிப்படுத்துகின்றது: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வள வாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.'' 155. அது (வெண்கல சர்ப்பம் - தமிழாக்கியோன்) இரண்டு நோக்கங்களுக்காக உயர்த்தப்பட்டது. ஜனங்கள் முறுமுறுத்துக் பாவம் செய்தனர். அவர்கள் பாம்புகளால் கடிக்கப்பட்டு மரித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பா வ ங் க ள் மன்னிக்கப்படவும், அவர்களுடைய வியாதி சுகப்படவும் அது: உயர்த்தப்பட்டது. 156. அதே ஊற்று நமது இரட்சிப்புக்காகவும், சரீர சுகத்திற்காகவும் இன்றைக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் 'அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவ ராயிருக்கிறார்.'' 157. வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த தேவனுடைய" 'வார்த்தை கட்டளையிட்டபடியே, அந்த கன்மலை அடிக்கப்பட்ட போது, அதிலிருந்து சுத்த, தெளிவான தண்ணீர் பீறிட்டு வெளிவந்தது--அசைவற்ற, அசுத்தமான தண்ணீரல்ல, அது தேவனுடைய சமுகம் - சுத்தமான தண்ணீர். அதை பருகினவர் கள் அனைவரையும் அது உயிர்காத்தது. அது உண்மையென்று நாமறிவோம். ஏனெனில் அது பழைய ஏற்பாட்டில் ஒரு முன்னடையாளமாக எழுதிவைக்கப்பட்டுள்ளது. 158. அதை உபயோகிக்க நீங்கள் தண்ணீர் இரைக்கவோ அல்லது 'பம்ப்' செய்யவோ, அதை சேர்ந்து கொள்ளவோ, அல்லது வேதாகம கல்லூரிக்கு சென்று அதை கற்றுக் கொள்ளவோ அவசியமில்லை. நீங்கள் அங்கு செல்ல நேர்ந்தால் அவர்கள் அதை இவ்விதம் உபயோகிக்கக் கற்றுக் கொடுப்பார் கள்: "ஓ, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இந்த விதமாக நீங்கள் செய்யவேண்டும்.'' 159. ஆனால் பாருங்கள், பரிசுத்த ஆவியைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் பரிசுத்த ஆவியை உபயோகிப்பது கிடையாது, பரிசுத்த ஆவிதான் உங்களை உபயோகிக்கிறது. பாருங்கள், பாருங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியை உபயோகிப்பது கிடையாது, பரிசுத்த ஆவி உங்களை ஆட்கொண்டுள்ளது. வரம் என்பது, ஒரு கத்தியைக்கொண்டு எழுதுகோலை சீவுவது போலல்ல. நீங்கள் தேவனுக்கு உங்களை சமர்ப்பித்து, பக்கமாக விலகி, பரிசுத்த ஆவி உங்களை உபயோகிக்க விட்டுக்கொடுப்பதே அது. 160. கவனியுங்கள், அவர்கள் அதை 'பம்ப்' செய்யவோ, அல்லது தண்ணீர் இரைக்கவோ அவசியமில்லை. அவர்கள், 'இந்த தண்ணீரை எப்படி உபயோகிக்க வேண்டும்?' என்று, கேட்கவும் அவசியமில்லை. ஏனெனில் அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் தாகமா யிருந்தனர். எனவே தண்ணீரை என்ன செய்யவேண்டுமென்று அவர்கள் அறிந்திருந்தனர். 161. அது போன்று தான் ஆண்களும் பெண்களும் உள்ளனர்-அவர்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களா யிருப்பினும், அவன் தேவன் பேரில் தாகமாயிருந்தால், ஆங்கிலிகன் சபையைச் சேர்ந்த இந்த இங்கிலாந்து நாட்டு சகோதரன் சென்ற இரவு கூறின விதமாக, அவன் வேதாகமக் கல்லூரிக்குச் சென்று, அவன் பெற்றுள்ள அந்த மகத்தான வரமாகிய அந்நிய பாஷை பேசுதல் என்பதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்றும், இதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்றும் கேட்கவேண்டிய அவசியமில்லை. முதலாவதாக, அவர்கள் அவனை உதைத்து வெளியே தள்ளிவிடுவார்கள். பாருங் கள்? அவன் தாகமாயிருந்தான். எனவே தேவன் அவனை நிறைத்தார். அவ்வளவு தான். தாகமாயிருந்தால் அவர் நிறைக்கிறார். 162. யாரும் உங்களைக் கட்டுப்படுத்தி, அதை என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவேண்டியதில்லை. தேவன் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும், அவன் என்ன செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, அந்த வழியில் நடத்துகிறார். நீ தனிப் பட்ட ஒருவன். நீ தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறாய். யாரும் உன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. நீ யாரிடத்திலும் சென்று அவருடைய ஆலோசனையைக் கேட்டு ''தான் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்" என்று கூறவேண்டிய அவசியமில்லை. இல்லை, ஐயா. தேவன் தமது விருப்பத்திற்கேற்ப அதை உபயோகிக்கிறார். நீ தாகமாயி ருந்தால். போதுமான தண்ணீர் குடிக்க நீ அறிந்திருக்கிறாய். - 163. இன்று காலை நீதாகமாயிருப்பாயானால், அதிலிருந்து பருகுவாயாக. அவ்வளவுதான் நீ செய்யவேண்டும். தாகமாயுள்ள பிள்ளைகள் இலவசமாக தம்மிடமிருந்து பெற்றுக் கொள்ள தேவன் ஒரு வழியை வகுத்துள்ளார். இன்று காலை பசிதாகமா யுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவன் ஒரு வழியை. அருளியுள்ளார். ஒருக்கால் இரட்சிக்கப்படாதவர் இங்கு அமர்ந்திருக்கக்கூடும். இரட்சிக்கப்படும் தருணத்திலுள்ள ஜனங்கள் இங்கு அமர்ந்துள்ளனர். 164. ஸ்தாபன சபையின் அங்கத்தினர்கள் இங்கு அமர்ந் துள்ளனர். நீங்கள் சரியானதை செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் தொட்டியிலிருந்து தண்ணீர் குடிக்கும் நிலையில் இருக்கின்றீர்கள். அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு சத்தியத்தை அறிவிக்க மாட்டார்கள். 165. நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, தேவனு டைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து ஊற்றண்டை வருதலே. அப்பொழுது அவர் உங்கள் தாகத்தை தீர்ப்பார். “இந்த நீரூற்றின் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாக முண்டாகாது'' (யோவான் 4:14). 166, இந்த தண்ணீரைக் கிருபையினால் ஏற்றுக்கொள் கிறவனை அவர் எவ்வாறு விடுவித்தார் என்பதைக் கவனியுங் கள்-ஒரு ஸ்தாபன முறைமையின் மூலமோ அல்லது கல்வியாகிய தொட்டியின் மூலமோ அல்ல. ஜீவனைக் கொடுக்கும் ஆதார மாகிய தமது வார்த்தையை அவர் உறுதிபடுத்துகிறவராயிருக் கிறார். அவருடைய வார்த்தையையும் தண்ணீரையும் நீங்கள் பெற்றுக் கொண்டபோது, ஜீவனைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று இங்குள்ள எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? (சபை யோர் 'ஆமென்' என்கின்றனர்-ஆசி). 167. நாம் இன்னும் ஓரிரண்டு உதாரணங்களைப் பார்ப் போம். சிறிது நேரத்தில் நான் முடித்து விடுகிறேன். என் வாயில் அந்த பொத்தான் இருந்திருக்க வேண்டும். கவனியுங்கள், நான். பேசிக்கொண்டே போகிறேன்- அப்படி செய்ய வேண்டுமென்று நான் எண்ணவில்லை. கவனியுங்கள், நாம் இன்னும் இருவரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 168. யாக்கோபின் தொட்டியண்டை இருந்த ஸ்திரீயை நாம் எடுத்துக் கொள்வோம்- அது தோண்டப்பட்ட கிணறு, அவள் அங்கிருந்தாள். அந்த ஸ்திரீ அறிந்திருந்ததெல்லாம் அந்த தொட்டிக்கு வந்து தண்ணீர் மொள்ளுதலே, அதைச் சுற்றிலுமிருந்த இயற்கை காட்சியின் மத்தியில் ஒரு மனிதன்ஒரு யூதன்- உட்கார்ந்திருப்பதை அவள் கண்டாள். அவளோ சமாரியப் பெண். அது சீகார் என்னும் ஊரில் நடந்த ஒரு சம்பவம். யூதனாகிய இவர் வழக்கத்திற்கு மாறாக இந்த ஸ்திரீபு டன் ஒரு - வார்த்தை பேசினார் என்று பார்க்கிறோம். அவர் தாகத்துக்குத் தா' என்று கேட்டார். 169: அவள், ''நம்மிடையே ஒதுக்கப்படுதல் (Segregation) உள்ளதே! நீர் யூ தன், நானோ சமாரியப் பெண். அப்படியிருக்க நீர் தண்ணீர் கேட்பது நியாயமல்ல'' என்றாள். 170 அதற்கு அவர், ''நீ யாரிடத்தில் பேசிக் கொண்டி ருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். உனக்கு நான் தண்ணீரைக் கொடுத் திருப்பேன். தண்ணீர் மொள்ள நீ மறுபடியும் இந்த கிணற் லுக்கு வரவேண்டிய அவசியமிராது. அது உனக்குள்ளே பொங்கி வரும் நீரூற்றாயிருக்கும்” என்றார். அவள் அதை கண்டு கொண்ட போது, அது உண்மையென்று நிருபிக்கப்பட்டது. 171. எந்த மனிதனும் அவ்வாறு கூறலாம். ஆனால் அது நிருபிக்கப்படவேண்டும். அவள், "நீங்கள் எருசலேமில் தொழுது கொள்ளவேண்டும் என்கிறீர்களே, நாங்கள் இந்த மலையில் தொழுது கொள்ளுகிறோம்'' என்றாள். 172. அவர், "இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. நாங்கள் எதை விசுவாசிக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம் ஆனால் உன்னிடம் ஒன்றை கூறவிரும்புகிறேன். இந்த மலையி லும் எருசலேமிலும் மாத்திரமல்ல, மனிதன் தேவனை ஆவி யோடும் உண்மையோடும் எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும். இப்படிப்பட்டவர்களை பிதாவானவர் விரும்புகிறார்''.. என்றார். அவர், “உன் புருஷனை இங்கு அழைத்துக் கொண்டு வா" என்றார். கவனியுங்கள், இங்கு தான் அது நிருபிக்கப் பட்டது. அவள் எந்த நீரூற்றண்டையில் இருந்தாள் என் பதை அது காண்பித்தது. அவர், ''உன் புருஷனை இங்கு - அழைத்து வா'' என்றார். அவள், "எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். 173. அவர், ''நீ உள்ளபடி சொன்னாய்'' என்றார். பாருங்க - கள், அவர் “உன் புருஷனை இங்கு அழைத்துக் கொண்டு வா" என்று கேட்ட கேள்விக்கு அவள் கூறின பதில், "எனக்குப் - புருஷன் இல்லை” என்பது முரணாக இருந்தது போல் தோன் றினது. 174. அவர், "நீ உள்ளபடி சொன்னாய். எப்படியெனில் - ஐந்து புருஷர்உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கி றவன் உனக்குப் புருஷனல்ல'' என்றார். 175. அந்த ஸ்திரீ அக்காலத்திலிருந்த ஆசாரியர்களைக் காட்டிலும் எவ்வளவு வித்தியாசமானவளாயிருந்தாள் என்ப தைக் கவனியுங்கள். அக்காலத்திலிருந்த ஆசாரியர்கள் அதை கண்டு, "அது பிசாசு, அது மனோதத்துவ வசீகரணம் (telepathy). அது பெயல்செபூல்'' என்றனர். பாருங்கள், வார்த்தை அதை வாக்குத்தத்தம் செய்திருந்ததை அவர்கள் காணத் தவறினர். 176. அந்த ஸ்திரீயோ அந்த ஆசாரியர்களைக் காட்டிலும் வேத்த்தை நன்கு அறிந்திருந்தாள். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மல்கியாவுக்குப் பிறகு நானூறு ஆண்டு காலமாக எங்களுக்கு தீர்க்கதரிசிகள் இருந்த தில்லை. நாங்கள் ஒருவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கி றோம். மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும்போது இதை தான் அவர் செய்வார்" என்றாள். இயேசு, ''நானே அவர்” என்றார். ஆமென். 177. அவள் என்ன செய்தாள் என்று கவனித்தீர்களா? அவள் தன் குடத்தை யாக்கோபின் கிணற்றடியில் வைத்து விட்டு ஊருக்குள்ளே ஓடினாள்; அவள் ஆர்டீஷியன் ஊற்றினால் நிறைந்திருந்தாள். அது உறுதியாக்கப்பட்டதை அவள் கண் டாள். அவர் தான் அவளுடைய வாழ்க்கையில் நீரூற்று. அதை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தட்டும். அவள் குடத்தை அங்கேயே வைத்து விட்டாள். வனாந்தரத்தில் அடிக்கப்பட்டு, அங்கிருந்ததாக ருசுவான அதே கன்மலையை அவள் கண்டு கொண்டாள். 178. இதை கூற விரும்புகிறேன். முன் காலங்களிலிருந்த அதே தேவன் நாம் அதிகமாக பேசும் அதே தேவன் இப்பொழுது இங்கிருக்கிறார். ஏதோ வேத சாஸ்திரத்தின் மூலம் பெற்ற அறிவினால் அல்ல, தனிப்பட்ட விதத்தில் அவருடைய உறுதி படுத்தலை கண்டதன் விளைவாய் பெற்ற அறிவின் காரண்மாக. கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியை சபையின் மேல் ஊற்று -வதாக' அவர் வாக்கருளியுள்ளார். அவர் “இருந்தேன் என்பவராக இராமல், "இருக்கிறேன்'' என்பவராக எப்பொழு. தும் இருக்கிறார்-நிகழ்காலச் சொல். . ." – 179. அப்பொழுது தொட்டி அதன் ருசியை இழந்து விட்டது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, தேவனுடைய வல்லமைக்குள் வந்துள்ள ஒவ்வொருவனும் அப்படித் தான் இருக்கிறான். அவனைப் பொறுத்தவரை, ஸ்தாபன முறைமைகள் தங்கள் ருசியை இழந்து விடுகின்றன. அப்பொழுது உங்களுக்கு, தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலுள்ள தவளைகள், பல்லிகள், கிருமிகள் ஒன்றும் வேண்டாம், நீங்கள் புதிதான, சுத்தமான, தேவனுடைய வார்த்தை என்னும் ஊற்றின் நீரைப் பருகுகின்றீர்கள். அது ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் ஆத்துமாக்களில் புதிதாக சுரக்கிறது. தேவனுடைய வார்த்தை உண்மையென இக்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளபோது, அதை ருசி பார்த்து, அது சரிதானா என்று கண்டு கொள்ளுங்கள். 180. தொட்டி அதுவரை உபயோகமாயிருந்த போதிலும், ஜீவ ஊற்று அப்பொழுது வந்துவிட்டது. எனவே ஆவிக்குரிய பருகுதலுக்கு யாக்கோபின் கிணறு இனி அவசியமில்லை, அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகினால் தவறொன்றுமில்லை யென்று அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் ஜீவ ஊற்றே அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். 181. நாம் இதுவரை பெற்றிருந்த ஸ்தாபன முறமைகள் இனி நமக்குத் தேவையில்லை. நாம் கடைசி காலத்தில் இருக்கி றோம். கடைசி காலத்தில் தேவன், தாம் என்னவெல்லாம் செய்யப்போவதாக வாக்கருளியிருந்தாரோ, அவையனைத்தும் அப்படியே நிறைவேறி வருகிறதை நாம் கண்கூடாகக் காண் கிறோம். இராணுவ பலம் கொண்ட அந்த மனிதன் எழுந்து நின்று, நடுக்கமுற்று, "ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது" என்று கூறக் கேட்டோம். ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் நம்மை எச்சரிப்பதை உணருகிறோம். அதற்காக எல்லாமே சரியாக அமைந்துள்ளதை நாம் காண் கிறோம். அப்படியானால், ஸ்தாபன முறைமைகளை விட்டு, ஊற் றண்டை வாருங்கள். ஆம், ஐயா. 182. அந்த கிணறு அதன் நோக்கத்தை நிறைவேற்றினது. ஆனால் இப்பொழுது அவள் ஊற்றையே முக முகமாய் சந்திக் கிறாள், 183. கூடாரப் பண்டிகையின் கடைசி நாளன்று இயேசு யோவான் 7:37-38ல் என்ன கூறினார்? "ஒருவன் தாகமாயிருந் தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.'' அங்கிருந்த வேதசாஸ்தி. களின் கூட்டத்தின் மத்தியில்! "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத். தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்தி” லிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்.” 184. ஜீவ ஊற்று உள்ளது, அந்த ஊற்றை தான் ஜனங்கள் கோட்பாடுகளுக்காக புறக்கணித்து விட்டனர். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டும். அவர் எனக்கு... நான் முடிக்கப் போகிறேன். 185. என்னைப் பொறுத்தவரை, வனந்தரத்தில் சாகக் கிடந்த ஆகாரையும் அவளுடைய பிள்ளையையும் காப்பாற்றினது அந்த ஊற்றே. 186. ஏசாயா 32ல் கூறப்பட்டுள்ள கன் மலை அவரே. விடாய்த்த பூமிக்கு அவரே பெருங்கன்மலை. அவர் புயல் காற்றின்போது ஒதுக்காக இருக்கிறார். 187. சகரியா 13. பாவத்தை போக்க தாவீதின் குடும்பத் தாருக்கு திறக்கப்பட்ட ஊற்று அவரே. அவர் அப்படியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நீங்களும் நம்புகின்றீர்களா? (சபை யோர் 'ஆமென்' என்கின்றனர்-ஆசி). 188. சங் 36:9ல் அவர் தாவீதின் ஜிவஊற்றாயிருக்கிறார். அவர் தாவீதின் அமர்ந்த தண்ணீர்கள், பசுமையான புல்லுள்ள இடங்கள். அவர் தாவீதுக்கு ஓடையின் தண்ணீர். 189. ஆதி. 17ல்,அவர் ஆபிரகாம் பால்குடிக்கும் மார்பகம்எல் ஷடாய் (EI Shaddai). அவனுடைய பெலன் அவனை விட்டுப் போன பின்பும் அவன்...தேவன் சொன்னார். 190. “எனக்கு நூறு வயதாகி விட்டதே. இது எப்படியா கும்? நான் கிழவன். என் மனைவியும் கிழவி, இது எப்படியாகும்?'' 191. "நான் எல் ஷடாய்'' என்றார் அவர். "எல்” என்றால் ''அந்த' ; “ஷடாய்'' என்றால், “மார்பகம்''. 'ஷடாய்' என்பது " பன்மைச் சொல். அப்படியானால், ''நான் மார்பகம் கொண்ட தேவன் '' என்று அது அர்த்தங்கெள்ளும். 192. ஒரு குழந்தை வியாதிப்பட்டு, அழுது தொந்தரவு . செய்து, அதன் பெலன் அதை விட்டுப் போன பின்பு அது தாயின் மார்பகத்தில் பாலுண்டு தன் பெலனை மீண்டும் பெறுகிறது. நிச்சயமாக. அது மாத்திரமல்ல...அது பாலுண்ணும் போது: அழுது தொந்தரவு செய்வதில்லை. அது தாயின் மார்பகத்தில் பெலனைப் பெற்று திருப்தியடைகிறது. 193. ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளை, -களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்னும் தேவ "னுடைய வாக்குத்தத்தத்தை இருதயத்தில் ஏற்றுக் கொள்ளும் எந்த மனிதனும் மார்பகத்தில் பாலுண்டு தன் பெலனை மீண்டும் பெற்றுக்கொள்கிறான். அழுது தொந்தரவு செய்யும் பிள்ளையே, அதை விசுவாசி! இது விசுவாசிகளுக்கே. 194, கவிஞர்கள் விசுவாசிகளாகிய நமக்கு அநேக பாடல் களை எழுதி வைத்துள்ளனர், அவர்களில் ஒருவர் இவ்வாறு இயற்றியுள்ளார். இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு அவ்வெள்ளத்தில் பாவிகள் மூழ்கும் போது குற்றமுள்ள அவர்களுடைய கறையைப் போக்குகின்றனர் மரிக்கும் தருவாயிலிருந்த அக்கள்ளன் அவன் காலத்தில் அவ்வூற்றைக் கண்டு களிகூர்ந்தான் அங்கு நான், அவனைப் போல் துன்மார்க்கனாய் இருப்பினும் என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்கிறேன்.. காயத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் அந்த நதியை நான் விசுவாசத்தால் கண்ட முதற்கு மீட்கும் அன்பே என் பொருளாக உள்ளது நான் மரிக்கும் வரை அவ்வாறே இருக்கும். 195. எனக்கு அவர் பிரித்தெடுக்கும் வார்த்தையின் தண்ணி சீராக இருக்கிறார். அது அவருடைய வார்த்தைக்கு முரணாயுள்ள அனைத்தினின்றும் உங்களைப் பிரிக்கின்றது. அது தான் நாம். விசுவாசிக்கும் ஊற்று. ஆம், ஐயா, மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டிகளிலிருந்து என்னைப் பிரித் தெடுத்து, ஜீவத்தண்ணி ருள்ள ஊற்றுக்கு என்னைக் கொண்டு சென்றது அந்த தண்ணீரே ஓ, நண்பனே, அவர் நமக்கு என்னவாயிருக்கிறாரென்று நான் இப்படி சொல்லிக் கொண்டே போகமுடியும். அவர் அல்பா ஓமெகா. அவர் ஆதி, அவர் அந்தம், அவர் இருந்தவர், இருக்கிற வர், வருகிறவருமானவர். அவர் தாவீதின் வேரும் சந்ததியு' மானவர். அவர் விடிவெள்ளி நட்சத்திரம். அவர் எனக்கு எல்லா - வற்றிற்கும் எல்லாமாயிருக்கிறார். 196. சகோதரனே, சகோதரியே, வாழ்நாள் முழுவதும் மனிதனால் உண்டாக்கப்பட்ட தொட்டியின் தண்ணீரைப் பருகுபவர்களாக நீங்கள் இருப்பீர்களானால், இன்று காலை அந்த தொட்டியைப் புறக்கணித்து இந்த ஊற்றண்டை நீங்கள் ஏன் வரக்கூடாது? 197. சிறிது நேரம் நாம் தலைவணங்குவோம். உங்கள் தலைகள் வணங்கியிருக்கும்போது... (ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பாடுகிறாள், வேறொருவர் அதன் அர்த்தத்தை வியாக்கியானம் செய்யும்போது, ஒலி நாடாவில் காலி இடம்க ஆசி).., என் கருத்தின்படி, பீட அழைப்பு. எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? 198. எனக்கு பயமாயிருந்தது. உங்களை நான் அதிநேரம் பிடித்து வைத்து விட்டேன். என் செய்தியிலிருந்து எத்தனையோ பாகங்களை நான் துண்டித்து விட்டேன். ஆனால் நான் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டு மென்று பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறார் என்று நம்பு கிறேன். (ஒலி நாடாவில் காலி இடம்-ஆசி). பாருங்கள்? பாருங்கள்? தேவனுடன் சரி செய்து கொள்வதைக் காட்டிலும் வேறெதுவும் இக்காலத்தில் முக்கியம் வாய்ந்ததில்லை- நமது பகல் விருந்து, அது எதுவாயிருப்பினும். கர்த்தர் இங்கிருக் கிறார். இப்படி இதற்கு முன்பு ஒரு முறைதான் கேட்டிருக் கிறேன் (அந்திய பாஷையில் சகோதரி பாடினதை குறிப்பிடு கிறார்- தமிழாக்கியோன்). 199. இப்பொழுது இங்குள்ளவர் அனை வருமே, ''எத்தனை பேர்' என்பதில்லை. அதைப் பருக விரும்பும். இங்குள்ளவர் அனைவருமே ஜெபத்திற்காக எழுந்து நிற்கவும். கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. (சகோ. பிரான்ஹாம் அமைதியாக இருக்கிறார்-ஆசி). கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. 200. இப்பொழுது இங்கு நின்று கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் கையுயர்த்தி, ''தேவனே, என் மேல் அசைவாடும். என்னை நிரப்பும். இந்த ஊற்றிலிருந்து நான் பருகட்டும். நான் சரியானவைகளைச் செய்யவில்லை. என்னை மன்னிக்க வேண்டு கிறேன். என் பாவங்களைக் கழுவ வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இன்று முதல் நான்...' பாருங்கள்! என்னே! இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு அவ்வெள்ளத்தில் பாவிகள் மூழ்கும்போது குற்றமுள்ள அவர்களுடைய கறையைப் போக்குகின்றனர். 201. கிறிஸ்தவ விசுவாசியாகிய நீ, கிறிஸ்துவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாய். ஆனால் இன்ன மும் நீ...அப்படியானால் அதுவே ஊற்று. எனக்குத் தெரிந்த ஒரே ஊற்று இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்று மாத்திரமே. இங்குள்ள உங்களில் அநேகர்... - 202. அன்றொரு இரவு, கழுகுக் குஞ்சு தானியக் களஞ்சிய முற்றத்தில் கோழிக் குஞ்சிகளுடன் நடமாடிக் கொண்டிருந் ததைக் குறித்து நான் பேசினேன். அதற்கு கோழிக்குஞ்சு களைத் தவிர வேறொன்றும் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் அதன் தன்மை கோழிக்குஞ்சுகளின் தன்மையைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தது என்று மாத்திரம் அது அறிந்திருந்தது. பின்பு அதன் தாய் அதை தேடி வந்தது. அது ஆகாயத்தி லிருந்து சத்தமிட்டது. அது கழுகின் அழைப்பு. பாருங்கள், தொடக்கத்திலேயே அது கழுகாயிருந்தது. இல்லையென்றால் அந்த அழைப்பை அது கண்டு கொண்டிருக்க முடியாது. பாருங்கள், அது... 203. வளருவதற்காக ஒன்றிருக்க வேண்டும். இல்லா விடில் அது ஜீவனை உற்பத்தி செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தை என்னும் வித்து உங்களுக்குள் இருக்குமானால், அதை வளரச் செய்து உங்களுக்கு அதை தத்ரூபமாக்க பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். 204. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறாதவர் எத்தனை பேர் இங்குள்ளனர்? உங்கள் கைகளை யுயர்த்து, வீர்களா? சுற்றி லும். எல்லாவிடங்களிலும், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்து, அதைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், உங்கள் கைகளை உயர்த்தின நிலையிலேயே இருங்கள். - 205. சுற்றிலும் நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருக் கிறவர்கள், உங்கள் கரங்களை அவர்கள் தலைகள் மேல் வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 206. இப்பொழுதே பரிசுத்த ஆவியானவர், தம்மைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரையும் நிரப்புவார் என்று விசுவாசிக்கிறேன். உணவு சாலையில் வைக்கப்பட்டுள்ள உணவைக் குறித்து சிந்தனை செய்யாதீர்கள். இங்குள்ள உணவைக் குறித்து சிந்தியுங்கள், இதுதான் ஜீவன், பாருங்கள் இதுவே ஜீவன். 207. நீங்கள் ஒவ்வொருவரும் திரும்பி, அவர்கள் மேல் கைகளை வையுங்கள். "அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள்'' யார் மேல் கைகளை வைத்திருக்கிறீர்களோ, அவர்களுக்காக நீங்கள் ஜெபியுங்கள். 208. இப்பொழுது வெளியே செல்ல நினைக்க வேண்டாம். வேறொன்றையும் குறித்து நினைக்க வேண்டாம். ஒவ்வொரு நபரையும் நிறைக்க பரிசுத்த ஆவியானவர் இங்குள்ளார் என்பதை மாத்திரம் இப்பொழுது சிந்தனை செய்யுங்கள். உங்கள் இருதயத்தை திறந்து, தொட்டித் தண்ணீர் அனைத் தையும் களைந்து, ''ஓ, ஜீவ ஊற்றே , எனக்குள் வாரும். ஓ, தேவனாகிய கர்த்தாவே, உமது நன்மையினாலும் கிருபையினா லும் என்னை நிரப்பும்'' என்று சொல்லுங்கள். 209, என்றென்றும் வற்றாத ஊற்றாகிய கர்த்தராகி 3 இயேசுவே, இங்குள்ள ஒவ்வொருவரையும் நீர் நிரப்ப வேண்டும் மென்று, தேவனே, உம்மை வேண்டிக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இங்கு இறங்குவாராக. தேவனே, நாங்கள் மற்றெல்லாவற்றையும் இப்பொழுது மறக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது எங்கள் மத்தியில் இறங்கி, எல்லாவிடங்களிலும் நின்று கொண்டுள்ள இவர்களுக்கு ஜீவத்தண்ணீரை இலவசமாய் தந்தருள்வாராக. ஓ, தேவனே, இதை அருளும். ஜெபமும் பாட்டும் ஒன்றாக இணைந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், அது உம் தெய்வீக பிரசன்னம் என்பதை உணர்ந்து, அந்த ஊற்றண்டை 'நாங்கள் வரவிரும்புகிறோம். எங்களுக்கு உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேண்டும். ஆண்டவரே, இவர்கள் அதற்காக ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். இந்நேரமே அவர்கள் தேவனுடைய நன்மையினால் நிரப்பப்படவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். ஓ, தேவனே, இதை அருள்வீராக, உமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டருளும். அவர்கள் மேல் வாரும். தேவனுடைய வல்லமையும் பரிசுத்த ஆவியும் அவர்களை அதிகமாக நிரப்பட்டும். தேவனே, இதை அருளும். 210. பரலோகத்தின் மகத்தான தேவனுடைய சமுகம் எங்கள் மத்தியில் நின்றுகொண்டு எங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்ததற்காக உமக்கு எவ்வளவாக நாங்கள் நன்றி செலுத்து கிறோம்! ஆண்டவரே, இந்த பகல் வேளையிலே எங்களைப் போஷியும். ஆண்டவரே, உமது மேசையின் மேலுள்ள ஆகாரம் எங்களுக்கு வேண்டும், தேவனே, இப்பொழுதே எங்களைப் போஷியும், பரிசுத்த ஆவியினால் எங்களைப் போஷியும். நாவு வறண்டுபோய் எங்கள் ஆத்துமாக்கள் பசியடைந்து, தாகமா யுள்ளன. அந்த பாடலுக்கு நீர் அர்த்தம் உரைத்தபோது "வறண்ட நிலத்தின்மேல் தண்ணீர் ஊற்றப்படும்'' என்றீர். ஆண்டவரே, அது நிறைவேறட்டும், “'வறண்ட நிலத்தின் மேல் தண்ணீர் ஊற்றப்படும்'' என்னும் உம் வார்த்தைகள், உம் முடைய பிள்ளைகளின் இருதயங்களில் நிறைவேறுவதாக. நித்திய தேவனே, உமது ஊழியக்காரர்களின் ஜெபத்தைக் கேட்டு, அந்த ஆசிர்வாதத்தை எங்களுக்கு அருள்வீராக, ஆமென். ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன்! 211, இப்பொழுது அவரைத் துதித்துக் கொண்டே யிருங்கள். பரிசுத்த ஆவி இங்கிருக்கிறார். அவரைத் தேடுங்கள். நீங்கள் . பரிசுத்த ஆவியைப் பெறவில்லை யென்றால், அது உங்களுடைய தவறு. நான் இயேசுவை எவ்வளவாக நேசிக்கிறேன் ("இவைகளைக் காட்டிலும் எ ன் னை அதிகமாக நேசிக்கிறாயா?') இயேசுவை எவ்வளவாக நேசிக்கிறேன் ஏனெனில் அவர் முதலாவதாக என்னை நேசித்தார், ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன் (தேவனுக்குத் துதியுண்டாவதாக!) ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன் (இப்பொழுது அவர் வருவாரானால்!) ஓ, இயேசுவை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். ஏனெனில் அவர் முதலாவதாக என்னை நேசித்தார். நான் அவரைப் புறக்கணிக்க மாட்டேன் நான் அவரைப் புறக்கணிக்க மாட்டேன் நான் அவரைப் புறக்கணிக்க மாட்டேன் ஏனெனில் அவர் முதலாவதாக என்னை நேசித்தார். அதிசயமானவர், அதிசயமானவர் இயேசு எனக்கு அவர் ஆலோசனை கர்த்தர், சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன் என்னை இரட்சித்து, எல்லா பாவம் அவமானத்தினின்றும் என்னைக் காக்கிறார் என் மீட்பர் அதிசயமானவர், அவர் நாமத்தைத் துதியுங்கள் 212. இந்த பாடலை அவரிடம் ஏறெடுப்போம். அதிசயமானவர், அதிசயமானவர் இயேசு எனக்கு அவர் ஆலோசனை கர்த்தர், சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன் என்னை இரட்சித்து, எல்லா பாவம் அவமானத்தினின்றும் என்னைக் காக்கிறார் என் மீட்பர் அதிசயமானவர், அவர் நாமத்தைத் துதியுங்கள்! 213 அதை உணருகிறவர் அனைவரும், 'ஆமென்' என்று சொல்லுங்கள். (சபையோர், 'ஆமென்' என்கின்றனர்- ஆசி) ஓ, அல்லேலூயா! சிலர் பரிசுத்த ஆவியைப் பெறுகிறது நான் காண்கிறேன். ஒரு சமயம் நான் இழக்கப்பட்டேன், இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டு ஆக்கினைக்கு நீங்கலானேன் இயேசு விடுதலையும் முழு இரட்சிப்பும் அளிக்கிறார் என்னை இரட்சித்து, எல்லா பாவம் அவமானத்தினின்றும் என்னைக் காக்கிறார். என் மீட்பர் அதிசயமானவர், அவர் நாமத்தைத்துதியுங்கள் இப்பொழுது கைகளையுயர்த்தி அவரை உண்மையாகத்துதிப்போம். ஓ, அதிசயமானவர், அதிசயமானவர் இயேசு எனக்கு அவர் ஆலோசனை கர்த்தர். சமாதான பிரபு, வல்லமையுள்ள தேவன் என்னை இரட்சித்து, எல்லா பாவம் அவமானத்தினின்றும் என்னைக் காக்கிறார் என் மீட்பர் அதிசயமானவர், அவர் நாமத்தை துதியுங்கள் 214. அவரை நேசிக்கிறீர்களா? (சபையோர், 'ஆமென் என்கின்றனர்- ஆசி). ஓ, அற்புதம்! இரத்தத்தினால் நிறைந்த அந்த ஊற்றுக்கு துதியுண்டாவதாக. அங்கு பாவிகள் மனிதர் மேல் கொண்டுள்ள பயத்தையும், எல்லா ஆக்கினையையும் இழந்து, மறுபடியும் சுயாதீனராகின்னறர். அல்லேலூயா! ஓ. என்னே, அது உண்மையில் அற்புதம்! 215. "அதிசயமானவர், அதிசயமானவர், இயேசு எனக்கு" என்னும் பாடலை நாம் மறுபடியும் பாடும் போது, மெதோடிஸ்டு' பாப்டிஸ்டு. கத்தோலிக்கர், பிரஸ் பிடேரியன் அனைவருமே திரும்பி, ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். அந்த பழைய கலப்பிற்குள் நாம் வருவோம். அது எனக்கு மிகவும் பிரியம், அப்படி செய்யும் போது, அந்த பாடலைப் பாடுவோம். ஓ, அதிசயமானவர், அதிசயமானவர் இயேசு எனக்கு " 216. (சகோ. டீமாஸ் ஷகரியன் - சகோ. பிரான்ஹாமுடன் பேசுகின்றார்: "சகோ, பிரான்ஹாம், நமது ஜனாதிபதி லின்டன் ஜான்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக எனக்கு செய்தி வந்துள்ளது. அவருக்காகவும் தேசத்திற்காகவும் ஜெபம் செய் தல் நல்லது என்று எண்ணுகிறேன்''. சகோதரர் அதைக் குறித்து கலந்தாலோசிக்கின்றனர்- ஆசி.) ....அதிசயமானவர் இயேசு எனக்கு (அது உண்மை ) ஓ, ஆலோசனை கர்த்தர், சமாதான பிரபு 217. (சகோ. ஷகரியன் மறுபடியும் சகோ. பிரான்ஹா முடன் பேசுகின்றார். “என்னை மன்னியுங்கள். என்னை மன்னியுங் கள். ஒரு நிமிடம் கீழே இறங்கிவருவீர்களா?'' சகோ, எர்ல் பிரிக்கட் "அதிசயமானவர்'' என்னும் பாடலைப்பாடி சபை யோரை நடத்துகின்றார். ஒலி நாடாவில் காலி இடம். சபை யோர், ''ஜீவநதி ஒன்றுண்டு'' என்னும் பாடலைப் பாடுகின்றனர். ஒலி நாடாவில் வேறொரு காலி இடம்-ஆசி) ''அதிகாரத்திலுள்ள யாவருக்கும் நாம் ஜெபம் பண்ண வேண்டும்'' என்று வேதம் கூறுகின்றது. (1 தீமோ.2:2) 218. எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் தேசத்தின் தலைவராகிய எங்கள் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அவசர தேவைக்காக இப்பொழுது நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். ஆண்டவரே, அவர் இதை அறியாமலிருக்கலாம், ஆனால் நீர் அறிவீர். நான் சகோ. ஜான்சனுக்காக ஜெபிக்கிறேன். அவர் விசுவாசி என்று தம்மை அழைத்துக்கொள்கிறார். பிதாவே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நாங்கள் அறிகிறோம். தேவனே அவருடைய உயிரைக் காரும் என்று ஜெபிக்கிறேன். நாங்கள் இப்பொழுது தேசிய இக்கட்டில் இருக்கிறோம். ஆண்டவரே, இப்பொழுதே அவர் மேல் உம்முடைய ஆலி இறங்கட்டும். அவர் ஆஸ்பத்திரியிலிருந் தாலும், எங்கிருந்தாலும், வால்டர் ரீட் ஆஸ்பத்திரியில் உமது ஆவி இறங்கி அவருடைய சரீரத்தை தொட்டு, அவருடைய உயிரைக் காப்பதாக! ஆண்டவரே, அவர் அதிக நெருக்கத்தில் இருக்கிறார் - நாங்கள் அறிந்துள்ளதைக் காட்டிலும் அவர் அதிக நெருக்கத்தில் இருக் கிறார். தேவனே, விசுவாசிகள் என்னும் நிலையிலும், நாங்கள் தேசத்தின் ஒரு பாகமாயிருக்கிறோம் என்னும் நிலையிலும், எங்கள் தலைவருக்காக ஜெபிக்கிறோம். இந்த மகத்தான, நேரத் திலே, அவருக்கு வாழ்வை நீடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.